முதல் வெற்றி பெறுமா போராடும் சிங்கம் ஆப்கன்? நியுஸிலாந்துடன் இன்று மோதல்! 1

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் டவுன்டனில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நியூஸிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி மோதிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று4 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணிதனது முதல் ஆட்டத்தில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக இலங்கை அணியை வீழ்த்தியிருந்தது. அதேவேளையில் 2-வது ஆட்டத்தில் வங்கதேசத்திடம் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்திருந்தது.

வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை நெருங்கிய நிலையில் திடீரென நியூஸிலாந்து அணி கடும் சரிவை சந்தித்தது. ஆனால்பின்கள வீரரான மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, லூக்கி பெர்குசன்ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றியை உறுதி செய்தனர். அந்த ஆட்டத்தில் 82 ரன்கள் விளாசிய ராஸ் டெய்லரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளியாகக்கூடும்.

முதல் வெற்றி பெறுமா போராடும் சிங்கம் ஆப்கன்? நியுஸிலாந்துடன் இன்று மோதல்! 2

முதல் வெற்றி பெறுமா போராடும் சிங்கம் ஆப்கன்? நியுஸிலாந்துடன் இன்று மோதல்! 3

குல்பாதின் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிபேட்டிங்கில் போதுமான வலுவில்லாமல் தடுமாறி வருகிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வி கண்டிருந்தது.

இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிராக மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் 187 ரன்கள் இலக்கை (41 ஓவர்களில்) துரத்திய போது 33 ஓவர்களில் 152 ரன்களுக்கு சுருண்டு 2-வது தோல்வியை சந்தித்தது. இதற்கிடையே அந்த அணியின் விக்கெட் கீப்பரும் தொடக்க வீரருமான மொகமது ஷசாத் மூட்டு வலி காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் பலவீனத்தை இது மேலும் அதிகரிக்கச் செய்யக்கூடும். ஷசாத்துக்கு பதிலாக இக்ரம் அலி ஹில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சில் அசத்திய மொக மது நபி, ரஷித் கான் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக் கூடும்.

முதல் வெற்றி பெறுமா போராடும் சிங்கம் ஆப்கன்? நியுஸிலாந்துடன் இன்று மோதல்! 4
Afghanistan’s Rashid Khan (C) celebrates with Afghanistan’s Najibullah Zadran (L) after taking the wicket of Pakistan’s captain Sarfaraz Ahmed for 13 during the 2019 Cricket World Cup warm up match between Pakistan and Afghanistan at Bristol County Ground in Bristol, southwest England, on May 24, 2019. (Photo by Glyn KIRK / AFP) (Photo credit should read GLYN KIRK/AFP/Getty Images)

குல்பாதின் நயிப் (கேப்டன்), நூர் அலி ஸத்ரன், ஹஸ்ரத்துல்லா ஷசாய், ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆப்கான், ஹஸ்மதுல்லா ஷாகிதி, நஜிபுல்லா ஸத்ரன், சமியூல்லா ஷின்வாரி, மொகமது நபி, ரஷித் கான், தவ்லத் ஸத்ரன், அப்தாப் ஆலம், ஹமித் ஹசன், முஜீப் உர் ரஹ்மான்.

கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர், காலின் மன்றோ, டாம் லேதம், டாம் பிளண்டெல், ஜிம்மி நீஷாம், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, டிரென்ட் போல்ட், லூக்கி பெர்குசன், மேட் ஹென்றி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *