போராட்ட குணம் கொண்ட ஆப்கன்: போராடாமல் சரணடையும் இலங்கை! வெல்லப்போவது யார்? 1

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கார்டிப் நகரில் உள்ள கார்டிப் வேல்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இன்றைய ஆட்டம்
ஆப்கன்-இலங்கை,
இடம்: கார்டிஃப்,
நேரம்: மாலை 3.00.
திமுத் கருணா ரத்னே தலைமையிலான இலங்கை அணி உலகக் கோப்பை தொடரை சிறப்பான வகையில் தொடங்க தவறியது. அந்த அணி முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. அந்த ஆட்டத்தில் இலங்கை அணி வெறும் 136 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.போராட்ட குணம் கொண்ட ஆப்கன்: போராடாமல் சரணடையும் இலங்கை! வெல்லப்போவது யார்? 2

திமுத் கருணாரத்னேவை தவிர (52 ரன்கள்) மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் நியூஸிலாந்து வேகப் பந்து வீச்சாளர்களிடம் எளிதாக சரணடைந்தனர். மேலும் பந்து வீச்சின் போது இலங்கை அணி வீரர்கள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 137 ரன்கள் இலக்கை நியூஸிலாந்து அணி 16 ஓவர்களுக்குள்ளேயே எட்டிப்பிடித்தது.

எனவே இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடிக்க வேண்டுமானால் இலங்கை அணி அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் ஆப்கானிஸ்தான் அணியானது சற்று வலுவானபந்து வீச்சை உள்ளடக்கியதாக உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இந்த ஆட்டத்தில் தொடக்க வீரர்களான மொகமது ஷசாத், ஹஸ்ரத்துல்லா சஷாய் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இவர்கள் சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி பெரிய அளவிலான ரன்களை குவிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

போராட்ட குணம் கொண்ட ஆப்கன்: போராடாமல் சரணடையும் இலங்கை! வெல்லப்போவது யார்? 3
CARDIFF, WALES – JUNE 01: Kusal Perera of Sri Lanka bats during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between New Zealand and Sri Lanka at Cardiff Wales Stadium on June 1, 2019 in Cardiff, Wales. (Photo by Alex Davidson/Getty Images)

ஏனெனில் தொடக்க வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், நேதன் கவுல்டர் நைல் உள்ளிட்ட வலுவானவேகப் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மற்ற பேட்ஸ்மேன்கள் சற்று சிறப்பாகவே செயல்பட்டிருந்தனர். 38.2 ஓவர்கள் வரையேதாக்குப்பிடித்தாலும் ஆப்கானிஸ்தான் அணி 207 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியுற்ற ஆப்கன் அணியில் அதன் தொடக்க வீரர்கள் இருவரும் டக் அவுட்டாயினர். எனினும் அதன் மிடில் ஆர்டர், கடைசி வரிசை வீரர்கள் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். அதன் பந்துவீச்சும் ரஷித் கான், முகமது நபி, ஹமித் ஹசன் ஆகியோருடன் பலமாகவே உள்ளது.
கார்டிஃப் மைதானத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேகமூட்டம் இருக்கும் என்பதால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக சூழல் இருக்கும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *