சச்சின், கங்குலி, லட்சுமனனுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ நிர்வாகம்!
ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள் வகித்து வருவதால் சச்சின் மற்றும் பிபிஎஸ் ஆட்சி மன்னனுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிசிசிஐ விதிகளின்படி தேசிய அணி மற்றும் ஐபிஎல் அணி என இரண்டிலும் பதவி வகிக்கக்கூடாது.
தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்தல், ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் எந்த ஒரு பதவியிலும் இருக்கக்கூடாது. இதன் காரணமாக தற்போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் சவுரவ் கங்குலியும் இதில் இடம் பெற்றுள்ளார். சௌரவ் கங்குலி சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் பிசிசிஐ அறிவித்த இந்திய அணியின் ஆலோசகராக அளவில் உள்ளனர். தற்போது சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியிலும், விவிஎஸ் லட்சுமணன் ஐதராபாத் அணியிலும் கங்குலி டெல்லி ஐபிஎல் அணியிலும் இடம் பெற்று பயிற்சி கொடுத்து வருவதால் இவர்களுக்கு பிசிசிஐ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரசிகர்களின் முன்னிலையில் சச்சின் டெண்டுல்கர் கேக் வெட்டி தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 2013 ஆம் ஆண்டுடன் ஓய்வுப் பெற்றார் சச்சின் டெண்டுல்கர். ஆனால் ஓய்வுப் பெற்றாலும் அவருடைய ரசிகர்கள் சச்சினின் மறக்க முடியாத ஆட்டங்களை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பகிர்ந்தும், நினைவுக் கூறியும் வருகின்றனர்.
இந்நிலையில் ஏப்ரல் 24 ஆம் தேதியான இன்று சச்சின் டெண்டுல்கரின் 46 ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்களையும், கிரிக்கெட் வீடியோக்களையும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று சச்சினுக்கு வாழ்த்து சொல்வதற்காக அவரது வீட்டுக்கு முன்னதாக ரசிகர்கள் குவிந்தனர். அவர்களை காண வந்த சச்சினுடன் பலரும் செல்பி எடுத்துக்கொண்டனர். ரசிகர்களுக்கு முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.
சச்சினின் தீவிர ரசிகரான சுதிர் குமார் சவுத்ரி உட்பட பலரும் சச்சினுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கினார். ரசிகர்களுடன் சச்சின் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.