இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சனிக்கிழமை தொடங்கவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா தகவல்படி, ஒரு திடமான பொருளின் மீது மார்க்ரம் தனது விரக்தியை வெளிகாட்டியதால், மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. “தனது ஆட்டதால் விரக்தியடைந்த அவர், ஒரு திடமான பொருள் மீது கையைக் கொண்டு இடித்ததால் காயம் ஏற்பட்டுள்ளது” என்று கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா தன்னுடைய அதிகாரபூர்வ தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
சி.டி. ஸ்கேன் மூலம் மார்க்ரமின் காயம் உறுதி செய்யப்பட்டது.
“எய்டன் மார்க்ரமின் மணிக்கட்டில் சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டபோது மணிக்கட்டு எலும்பு முறிவைக் காட்டியது. இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். காயத்தை மேலும் நிர்வகிப்பதற்காக அவர் தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பும்போது ஒரு நிபுணரைப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,” என்று தென்னாப்பிரிக்கா டாக்டர் தெரிவித்தார்.
இறுதி டெஸ்ட் போட்டியைத் தவறவிட்ட பிறகு, மார்க்ராம் தனது செயல்களின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவும், அணியைச் சேர விரும்புவதாகவும் தெரிவித்தார்.
“இந்த சமயத்தில் வீட்டிற்குச் செல்வது வருத்தமளிக்கிறது, நான் என்ன தவறு செய்தேன் என்பதை நான் முழுமையாக புரிந்துகொண்டு அதற்கான முழு பொறுப்புணர்வையும் எடுத்துக்கொள்கிறேன். இதிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன், மற்ற வீரர்கள் இதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார்.

Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
“விளையாட்டில் உணர்ச்சிகள் அதிகமாக இயங்குவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், சில சமயங்களில் விரக்தி எனக்கு செய்ததைப் போலவே உங்களை மேம்படுத்துகிறது. ஆனால் நான் சொன்னது போல் இது ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை. அதற்கான முழுப் பொறுப்பையும் நான் எடுத்துள்ளேன், நான் அணியிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன், விரைவில் அவர்களுக்கும் தென்னாப்பிரிக்கா மக்களுக்கும் என்னை நிரூப்பிப்பேன்,” என்றார்.
சமீபத்தில், மிட்செல் மார்ஷும் இதேபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டார். கடந்த வாரம் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியின் போது ஆல்ரவுண்டர் டிரஸ்ஸிங் ரூம் சுவரில் குத்தியுள்ளார்.