24 வருடங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் சர்மா தனது ஓய்வினை அறிவித்துள்ளார். இதன் மூலம் இனிமேல் சர்வதேச போட்டிகளிலும் இந்தியாவில் நடக்கும் முதல் தர போட்டிகளுலும் கலந்து கொள்ள போவது இல்லை என வேறு அறிவித்துள்ளார் அஜய் சர்மா. டெல்லி அணியில் முதல் தர போட்டியில் ஆடி அதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தவர் அஜய் சர்மா.
அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்க்கு அனுப்பிய அஞ்சலில் அவட் கூறியதாவது,
தயவு கூர்ந்து என்னுடைய இந்த அஞ்சலை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் இன்றிலிருந்த சர்வதே போட்டிகளிலும் இந்திய முதல் தர போட்டிகளிலும் ஆட போவ்து இல்லை. என்னை மன்னித்து விடுங்கள். என தற்சார்பாக கூறியுள்ளார்.
ஆனால் அஜய் சர்மா இந்திய அணிகாக கடைசியாக விளையாடியது 24 வருடங்களுக்கு முன்னர் ஆகும். அதுவும் சென்னையில் தான் ஆடினார். அவர் தனது அறிமுக ஆட்டத்தை டெல்லீய்ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆடினார். முதல் தர போட்டியில் 1984 ஆம் வருடம் அறிமுகமானார் எனப்படுகிறது. அவர் இதுவரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார்.
இதனை பற்றி அவர் கூறியதாவது :
இந்தியாவிற்காக விளையாடியது மகிழ்ச்சிகரமானது, அது பல நினைவுகளை கொண்டுள்ளது. என்னுடைய ரசிகர்கள் என்னுடனே இத்தனை ஆண்டுகள் பயணித்தனர். எனக்கான பயிற்ச்சியாளார் மற்றும் அலுவளர்கள் மிகவும் நினைவுகூறத் தக்கவர்கள்.
இந்த இத்தனை ஆண்டுகளில் நான் என்னுடைய ஆட்டத்திறத்தை மேம்படுத்தியுள்ளேன். அனைவரயும் உற்ச்சாகப்படுத்த கற்றுக் கொண்டுள்ளேன்.
இத்தனை ஆண்டுகளுக்கு பிற்கு ஓய்வு ஏன்? :
அஜய் சர்மா இதுவரை 17 வருடங்களாக முதல் தர போட்டியில் ஆடியுள்ளார். மொத்தம் 129 போட்டிகள் ஆடியுள்ள அவர் 10120 ரன்களை குவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் ஆட தடை விதித்தது. அவர் அப்போது மேட்ச் ஃபிக்சிங் செய்ததற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்தது.
பின்னர் டெல்லி உயர்நீதி மன்றம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையிட்டு இவருக்கு விளக்கு அளித்தது. 2014 இல் டெல்லி உயர்நீதி மன்றம் இந்த உத்தரவை இட்டது.
இது நாள் வரை நான் எனது ஓய்வை அறிவிக்கததற்க்கு காரணம் சில சட்ட சிக்கள்கல் ஆகும். நான் எனது ஒய்வை அறிவித்தால் மட்டுமே எனக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து வர வேண்டியா நிதிகலும் ஒய்வூதியமும் கிடைக்கும் ஆகவே தற்போது எனது ஒய்வை அறிவித்தேன்.
அஜய் சர்மா முதல் தர போட்டியில் தான் அடித்த அரை சதங்களை விட சதங்கள் அதிகம். 38 சதங்களும் 36 அரை சதங்களும் அடங்கும்.
தன்னை சர்வதேச அளவில் ஆட அனுமதித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்க்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார் அஜய் சர்மா. அஜய் சர்மாவின் மகன் மனன் சர்மா டெல்லி அணிக்காக 26 முதல் தர போட்டியில் ஆடியுள்ளார். மேலும் அவர் இந்திய 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியிலும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்த்கது.