பேச்சு மூச்சில்லாமல் கேப்டனையே வெளியேற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி 1

ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் கொல்கத்தாவில் நடக்கிறது. ஏலத்துக்கு முன் 8 அணிகளும் தங்கள் வீரர்களை மற்ற அணிகளுக்கு விற்றுக் கொள்ளலாம். வீரர்களை வாங்கிக் கொள்ளலாம். வீரர்களை விடுவித்துக் கொள்ளலாம். இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

பேச்சு மூச்சில்லாமல் கேப்டனையே வெளியேற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி 2
Apart from Boult, the biggest trade that happened in this window was when Kings XI Punjab traded captain Ravichandran Ashwin with Delhi Capitals to acquire all-rounder Jagadeesha Suchith.

 

இதையடுத்து, பல வீரர்கள் ஏற்கனவே விளையாடி வந்த அணியில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், டெல்லிக்கு அணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மாறினார். இந்நிலையில், ரஹானேவும் மாற்றப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த இவர், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன். 2011 ஆம் ஆண்டில் இருந்து அந்த அணியில் ஆடி வந்த ரஹானே, கேப்டனாகவும் இருந்தார். கடந்த தொடரில் அந்த அணி, தொடர் தோல்வியைத் தழுவியதால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த அவரை, டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.

 

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியில் ஏற்கனவே ஷிகர் தவன், பிருத்வி ஷா, ரிஷாப் பன்ட், ஹனுமா விஹாரி ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ள நிலையில் ரஹானேவும் சேர்ந்துள்ளார்.

பேச்சு மூச்சில்லாமல் கேப்டனையே வெளியேற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி 3
Talking of Mumbai Indians and Delhi Capitals, they were the first two register a trade deal for this season.

இதற்கிடையே பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த அங்கித் ராஜ்புத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாறியுள்ளார். ராஜஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம், பஞ்சாப் அணிக்குச் செல்கிறார். டெல்லி அணியில் விளையாடி வந்த நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், மும்பை இண்டியன்ஸ் அணிக்குச் செல்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *