இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடுகிறார்கள் ரகானே, விஜய் 1
இங்கிலாந்து – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் உடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் எசக்ஸ் அணிக்கெதிராக ஜூலை 25-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
Cricket, India, Sri Lanka, Murali Vijay, Ishant Sharma
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரகானே மற்றும் முரளி விஜய் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் இரண்டு பேரும் தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளனர்.இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறாததால் அவர்கள் இங்கிலாந்து செல்லவில்லை. அதேவேளையில் இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடுகிறார்கள் ரகானே, விஜய் 2
“They have a fine team and some talented players, who have proved themselves in shorter formats. I am sure they are looking forward to do the same in Test cricket. On behalf of the Indian team, I wish them all the best.”

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றி வாகை சூடியது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒன்றில் டிரா, ஒன்றில் வெற்றி கண்டுள்ளது. நாளை இங்கிலாந்து லயன்ஸ் அணியை எதிர்தது விளையாடுகிறது.

இந்தியா ‘ஏ’ அணியில் உள்ள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் முன் தேர்வாளர்கள் டிராவிட்டிடம் ஆலோசனை கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடுகிறார்கள் ரகானே, விஜய் 3

இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் ரகானே மற்றும் முரளி விஜய் ஆகியோர் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாட முடிவு செய்துள்ளனர். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியில் இடம்பிடிக்க எளிதாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளனர்.

இந்திய அணி கடந்த முறை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது முரளி விஜய், ரகானே ஆகியோர் சதம் அடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *