நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி பொறுமையாக விளையாடியதால், அவரை பற்றி முன்னாள் இந்திய வீரர் அஜித் அகர்கர் பேசியதற்கு, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் தோனியின் ரசிகர்கள்.
நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி அந்த நேரத்திற்கு தகுந்தாற் போல் விளையாடாமல் இருந்ததால், அவரை பற்றி பேசினார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர்.
இரண்டாவது டி20 போட்டியில் 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 67 ரன்னுக்கு 4 விக்கெட் பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்தது. 10வது ஓவரின் போது களமிறங்கினார் தோனி, அப்போது ஓவருக்கு 10 ரன் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. எப்போதும் போல் தொடக்கத்தில் சில பந்துகளை வேஸ்ட் செய்துவிட்டார். போட்டி கை விட்டு நியூஸிலாந்து கைக்கு சென்ற பிறகு, பெரிய ஷாட்களை அடிக்க தொடங்கினார்.
முதலில் 20 பந்துகளை சந்தித்த மகேந்திர சிங் தோனி 17 ரன் மட்டுமே அடித்தார், ஆனார் கடைசியில் 37 பந்துக்கு 49 ரன் அடித்துவிட்டார். அவர் தொடக்கத்தில் பொறுமையாக விளையாடியதால், இந்திய அணி அந்த ரன்னை சேஸ் பண்ண முடியாமல், 40 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.
அந்த போட்டிக்கு பிறகு, தோனி அணியில் இருப்பதை பற்றி பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதில் அஜித் அகர்கரும் ஒருவர். இந்திய அணி டி20 போட்டிகளுக்கு தோனிக்கு பதில் வேறு ஒருவரை தேடவேண்டும் என அகர்கர் தெரிவித்தார்.
“தோனிக்கு பதிலாக வேறு ஒரு வீரரை இந்திய அணி தேடவேண்டும், டி20 போட்டிக்கு மட்டுமாவது என நினைக்கிறன். ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடுவது அனைவருக்கும் பிடிக்கிறது. நீங்கள் கேப்டனாக இருந்தால், அது வேறு. ஆனால், ஒரு பேட்ஸ்மேனாக டி20யில் அவரால் விளையாட முடியவில்லை. இந்திய அணியில் உள்ள வீரர்கள் சிலர் அனுபவம் பெற்றுள்ளார்கள், இதனால் தோனி இல்லை என்றால் ஒரு பிரச்சனை இல்லை,” என அகர்கர் கூறினார்.
அஜித் அகர்கருடன் சேர்ந்து முன்னாள் இந்திய வீரர்கள் விவிஎஸ் லட்சுமண் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோரும் தோனியை பற்றி விமர்சித்தார்கள்.
தோனியின் எதிர்காலத்தின் பற்றிய அஜித் அகர்கரின் கருத்து சரியாக இருந்தாலும், தோனியின் ரசிகர்கள் கோபமாகி ட்விட்டரில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
தோனி ரசிகர்கள் பதிவித்த சில ட்வீட்களை பாருங்கள்: