முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தோனி தலையில்லை, நாட்டில் உள்ள ஒரே தல அஜித் மட்டும்தான் என்று தெரிவித்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரீசாந்த் ஆல்பம் மற்றும் சினிமாவில் நடிப்பது என்று தன்னுடைய வாழ்க்கை பாதையை மாற்றினார்.
கிரிக்கெட்டில் பிரபலமாக இருந்த ஸ்ரீசாந்த் தற்போது ஓரங்கப்பட்டுள்ளார். வேறு எதாவது ஒரு துறையில் பிரபலமாக வேண்டும் என்று அவர் துடித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வீடியோ பதிவு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பிட்ட அந்த வீடியோவில் தல என்ற வார்த்தை குறித்து பேசிய அவர், உலகத்தில் ஒரே தல தான் அது நம்ம அஜித் அண்ணா தான், தோனியெல்லாம் தலயே கிடையாது என்பது போல பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், தோனி ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பலையை கிளப்பியுள்ளது.

பிக்சிங் பிரச்சனையில் மத்திய ஸ்ரீசாந்த் பல குண்ணை வீரர்களின் உதவிய நாடினார். அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனிக்கு பல முறை போன் செய்து குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். அதற்கு எந்த ஒரு ரிப்ளையும் தோனி செய்யவில்லை. இதன் காரணமாகத் தான் இந்த கடுப்பில் தோணி மீது பாய்கிறார் ஸ்ரீசாந்த் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூதாட்ட வழக்கில் சிக்கிய ஸ்ரீசாந்தை காப்பாற்ற தோனி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதன் காரணமாக அதிருப்தியிலிருந்த ஸ்ரீசாந்த் தற்போது தோனியை பழிவாங்கும் விதமாக பேசியுள்ளதாகவும் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சிஎஸ்கே கேப்டனான தோனியை சென்னைவாசிகள் அனைவரும் தல என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது.