வார்னர் இடத்தை நிரப்ப ரெடி : அலெக்ஸ் ஹெல்ஸ்
ஐ பி.எல் டி.20 தொடரின் 4 வது ஆட்டம் இன்று இரவு தொடங்க உள்ளது. இதில் சன் ரைசஸ் ஹைட்ராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மோதும் ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு ராஜிவ் காந்தி இன்டர்நேசனல் ,ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர ஆட்டகாரரான டேவிட் வார்னர் இந்த ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கவில்லை அதனால் அவருக்கு பதிலாக இந்தமுறை இங்கிலாந்து அணியின் சிறந்த ஆட்டகாரரான அலெஸ் ஹால்ஸ் அணியில் இடம்பெற்று உள்ளார்.
நடந்து முடிந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் ‘பால் டேம்பரிங்’ சர்சையில் சிக்கினர். அதன் மூலம் வருகின்ற 12 மாதங்கள் வேறு எந்த போட்டியிலும் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளனர்.
டேவிட் வார்னர் தனது சிறப்பான பேட்டிங் திறமையை பயன்படுத்தி 3 ஐ. பி. எல் தொடரில் ஆரஞ்சு கேப் க்கு சொந்தகாரராக இருந்துருக்கிறார்.
இந்த நிலையில் அவர் அணியில் இல்லாதது பெரிய இழப்பாகும் என சன்ரைசஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர் அலெஸ் ஹால்ஸ் இவரை இந்த அணி 1 கோடி தொகைக்கு எடுத்துள்ளது.இந்த போட்டியில் இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்க படுகிறது .
அலெஸ் ஹால்ஸ் கூறியதாவது டேவிட் வார்னர் இல்லாத இந்த இடத்தை தான் நிரப்ப போவதாக தெரிவித்தார் அலெஸ் ஹால்ஸ் .இவர் இந்த முறை நன்றாக விளையாடி சன்ரைசஸ் அணியின் வெற்றியை கொண்டாடுவார என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
கேன் வில்லியம்சன் தலைமையில் ஹைதராபாத் அணி இந்த வருட ஐ. பி. எல் தொடரில் விளையாட உள்ளது.
ராஜஸ்தான் அணியில் ஸ்மித் இடம்பெறவில்லை ரஹேனே தமையில் உள்ளது ராஜஸ்தான் அணி இந்த இரு அணிகளில் எந்த ஆணி வெல்லும் என்பதை பொருத்திறுந்து பார்ப்போம்.