இனி இந்த அணிக்காக நான் ஆடமாட்டேண்! திடீர் குண்டை தூக்கிப்போட்ட அம்பத்தி ராயுடு! என்ன சொல்லப்போகிறார் கேப்டன்? 1
Bengaluru: Chennai Super Kings' Ambati Rayudu in action during an IPL 2018 match between Royal Challengers Bangalore and Chennai Super Kings at M.Chinnaswamy Stadium in Bengaluru on April 25, 2018. (Photo: IANS)

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு புகார் கூறியிருந்த நிலையில், அச்சங்கத்தின் தலைவர் முகமது அசாருதீன் அதனை மறுத்துள்ளார்.

ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் ஊழல்வாதிகளால் நிரம்பியிருந்தால் ஐதராபாத் கிரிக்கெட் எப்படி முன்னேற்றமடையும் என அண்மையில் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்த அம்பத்தி ராயுடு, தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமாராவ் இது தொடர்பாக விசாரிக்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

ராயுடுவின் இந்த குற்றச்சாட்டால் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அசாருதீன், அம்பத்தி ராயுடு விரக்தி மன நிலையில் உள்ளதாகவும், அதனால்தான் அவர் இவ்வாறு பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.இனி இந்த அணிக்காக நான் ஆடமாட்டேண்! திடீர் குண்டை தூக்கிப்போட்ட அம்பத்தி ராயுடு! என்ன சொல்லப்போகிறார் கேப்டன்? 2

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

ஐதராபாத் கிரிக்கெட் சங்க தேர்தல் வாக்குறுதியால் அணியின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. திறமை இல்லாத வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கிளப் நிர்வாகிகளின் சிபாரிசு அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தகுதி படைத்தவர்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்த நிலையை மாற்ற வேண்டியது அவசியமானதாகும். யாராவது ஒருவர் இதைப்பற்றி பேச வேண்டும் என்பதால் நான் பேசுகிறேன். ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட அர்ஜூன் யாதவ் அதற்கு தகுதியானவர் கிடையாது. செல்வாக்கின் காரணமாக அவர் இந்த பதவியை பெற்றுள்ளார்

இனி இந்த அணிக்காக நான் ஆடமாட்டேண்! திடீர் குண்டை தூக்கிப்போட்ட அம்பத்தி ராயுடு! என்ன சொல்லப்போகிறார் கேப்டன்? 3
Ambati Rayudu of Chennai Super Kings during match 1 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Chennai Superkings and the Royal Challengers Bangalore held at the M. A. Chidambaram Stadium in Chennai, Tamil Nadu on the 23rd March 2019
Photo by Saikat Das /SPORTZPICS for IPL

இந்த வருடம் நடைபெற உள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன். நான் எதிர்பார்த்தபடி எதுவும் அமையவில்லை. நல்ல கிரிக்கெட்டை விளையாடக்கூடிய சூழ்நிலை அணியில் இல்லை. இந்த நிலைமை எனக்கு அசாதாரணமானதாக இருக்கிறது. எனவே வரும் ரஞ்சி சீசனில் ஐதராபாத் அணிக்காக விளையாடமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *