வைரல் வீடியோ : பாஞ்சாபி பங்கரா நடனம் ஆடும் கெய்ல் மற்றும் ரஸல்!!
ஐ.பி.எல் தொடரில் ஆன்ட்ரு ரஸல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். தற்போது அவர் தக்க வைக்கப்பட்டுள்ளார்.
டி20 போட்டியின் அதிரடி ஆட்டக்காரர் க்ரிஸ் கெய்ல் ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
View this post on InstagramA post shared by KingGayle ? (@chrisgayle333) on
2018ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரிவில் நடைப்பெற்றது. இதில் இளம் வீரர்கள் பலரும், பல கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஆனால் நேற்று மற்றும் இன்று காலை என 2 முறை ஏலத்திற்கு விடப்பட்ட மேற்கு இந்திய தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேன் கெய்லை யாரும் ஏலத்தில் கேட்கவில்லை. கடந்த 10 வருடங்களுக்கு மேல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் இவரது வானவேடிக்கை ஆட்டத்திற்கு தனி ரசிகர்கள் உண்டு. இவர் விளையாடும் போது சிக்ஸர் மழை பொழியும்.

இருப்பினும் உடற்தகுதி மற்றும் கடந்த ஆண்டு இறுதியின் குறைவான பேட்டிங் சராசரி ஆகியவை கெய்லுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டில் விலைபோகாத கத்திரிக்காயை மாறும் நிலைக்கு கெய்ல் தள்ளப்பட்டார். இந்நிலையில் மூன்றாவது மற்றும் இறுதி முறையாக ஏலம் விடப்பட்ட கெய்லுக்கு, கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாய்ப்பளித்துள்ளது.

அந்த அணியின் இணை நிறுவனர் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் வழிகாட்டி சேவாக் ஆகியோர் கெய்லின் மீது நம்பிக்கை வைத்து ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளனர். இதனால் தனது விசுவாசத்தையும், திறைமையும் வெளிக்காட்ட இந்த முறை ஐபிஎல் போட்டியில் கெய்ல் தனது அதிரடியை காட்டுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.