தோள்பட்டையில் சிறிய காயம் ஏற்பட்டு பயிற்சிக்கு வராமல் இருந்த கொல்கத்தா வீரர் ஆன்ட்ரு ரஸல் மீண்டும் தற்போது காயம் குணமாகி பயிற்சிக்கு வந்துள்ளார்.
சூப்பர் ஓவரில் யார்க்கர் மட்டுமே வீச வேண்டும் என்ற குறிக்கோளுடன் களம் இறங்கினேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ரன்கள் அடித்தது. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. டெல்லி அணியின் ரபாடாவின் துள்ளிய யார்க்கரால் கேகேஆர் அணியால் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவரில் சிறப்பாக பந்து வீசிய ரபாடா, அந்த ஓவர் குறித்து கூறுகையில் ‘‘உண்மையிலேயே கடைசி ஓவரின்போது பதற்றம் அதிக அளவில் இருந்தது. இதுபோன்ற நேரத்தில் எப்படி பந்துவீச வேண்டும் என்பதை உங்களது மனதில் தெளிவாக பதிவு செய்துவிட வேண்டும்.
யார்க்கர் பந்துகள் வீச வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினேன். அது சரியாக வேலை செய்தது. நான் என்னுடைய திட்டத்தில் தெளிவாக இருந்தேன்’’ என்றார்.
ரபாடா வீசிய துல்லியமான 3-வது யார்க்கர் பந்தில் ரஸல் க்ளீன் போல்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Guess who's back ?
He skipped the nets for a day after copping that blow to his shoulder, but it didn't take long for @Russell12A to get back to his regular drills ?#KKRHaiTaiyaar #DreRuss #KorboLorboJeetbo pic.twitter.com/2xBbm4s9QP
— KolkataKnightRiders (@KKRiders) April 3, 2019
டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சுனில் நரைன் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக நிகில் நாயக் சேர்க்கப்பட்டு, கிறிஸ் லின்னுடன் தொடக்க ஆட்டக்காரராகவும் களமிறக்கப்பட்டார்.
முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணிக்கு சாதகமாக அமைந்தது. நிகில் நாயக் 16 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரைத்தொடர்ந்து, உத்தப்பா 11, லின் 20, ராணா 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு, கேப்டன் கார்த்திக்குடன் ஷூப்மன் கில் களமிறங்கினார்.
விக்கெட்டுகள் விழுந்த போதிலும் பதற்றமடையாத கார்த்திக் துரிதமாக ரன் குவித்தார். எனினும், இந்த பாட்னர்ஷிப் நல்ல நிலையில் செல்ல தொடங்கிய நேரத்தில் கில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனால், அந்த அணி 61 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
கார்த்திக் – ரஸல் ஜோடி:
இதையடுத்து, அனுபவ வீரர்களான கார்த்திக் மற்றும் ரஸல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி அணி இக்கட்டான நிலையில் உள்ளது என்கிற நெருக்கடி இல்லாமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 13 மற்றும் 14-ஆவது ஓவரில் மட்டும் இந்த ஜோடி பெரிதளவு ரன் குவிக்கவில்லை.
ரஸல் 200 ஸ்டிரைக் ரேட்டுக்கு மேல் தான் ரன் குவித்து விளையாடினார். சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என அனைவரது ஓவர்களிலும் சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இதனால், ரஸல் 24-ஆவது பந்தில் அரைசதத்தை அடித்தார். அவர் அரைசதம் அடித்த கையோடு 2 பவுண்டரிகளை அடித்து மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 62 ரன்கள் எடுத்தார். கார்த்திக் – ரஸல் ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 52 பந்துகளில் 91 ரன்கள் சேர்ததது. இந்த பாட்னர்ஷிப் தான் ஆட்டத்தை மீண்டும் கொல்கத்தா அணியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.