காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேரினார் ஆஞ்சலோ மேத்யூஸ்!! 1

வங்கதேச அணியுடனான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேரியார் மேத்யூஸ். தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.

5 செஞ்சூரி, 6 அரைசதம்: பவுலரை பாடாய்படுத்திய சிட்டகாங் ஆடுகளத்திற்கு ஒரு டிமெரிட் புள்ளி

இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த மொமினுல் ஹக்யூ
பொதுவாக டெஸ்ட் போட்டி என்பது பேட்ஸ்மேன்களின் திறமையை சோதிக்கும் ஒரு ஆட்டமாகும். பேட்டிற்கும், பந்திற்கும் இடையில் சமமான போட்டி இருக்க வேண்டும் என்பதுதான் டெஸ்ட் போட்டியின் கோட்பாடு.

ஆனால் தற்போது போட்டியை நடத்தும் நாடுகள் தங்களுக்கு சாதகமன ஆடுகளத்தை தயார் செய்கிறது. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்தது.

காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேரினார் ஆஞ்சலோ மேத்யூஸ்!! 2
தனஞ்ஜெயா டி சில்வா

சமீபத்தில் முடிவடைந்த இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரின்போது மூன்று ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தால் அமைக்கப்பட்டது. குறிப்பாக ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் பந்து திடீர் திடீரென பவுன்ஸ் ஆகி வீரர்களை தாக்கியது. இதனால் மோசமான ஆடுகளம் என ஐசிசி மதிப்பிட்டது.

இந்நிலையில் வங்காள தேசம் – இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற சிட்டகாங் ஆடுகளம் ஐந்து நாட்கள் முழுவதும் பேட்ஸ்மேன்களுக்க சொர்க்கபுரியாக இருந்தது. ஐந்து நாட்களில் 24 விக்கெட்டுக்கள் மட்டுமே விழுந்தது. 1500 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. இதில் 5 செஞ்சூரி, 6 அரைசதம் விளாசப்பட்டது.

காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேரினார் ஆஞ்சலோ மேத்யூஸ்!! 3
ரோசன் சில்வா

சில அரைசதங்கள் 100 ரன்னை நெருங்கியதாகும். இவ்வளவு ரன்கள் அடிக்கப்பட்டும் ஆட்டம் டிராவில் முடிந்தது. பந்து வீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை. அவர்களை சோதனைக்குள்ளாக்கியது. இதனால் ஐசிசி ஆடுகளத்தை சோதனையிட்டது.

இந்நிலையில் ஐசிசி ஆடுகளத்தை சராசரி ஆடுகளத்திற்கும் கீழானது என்றும், தடைக்கான ஒரு புள்ளி (demerit point) ஒன்றும் வழங்கியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *