பஞ்சாப் அணியின் இயக்குனர் மாற்றம்: முன்னாள் இந்திய வீரர் நியமனம்! பழைய அணிக்கு கல்தா! 1

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இயக்குனராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது, கேப்டன் விராத் கோலியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் நியமிக்கப்படுவார் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் அந்த அணியின் (கிரிக்கெட் செயல்பாடு) இயக்குன ராக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியின் இயக்குனர் மாற்றம்: முன்னாள் இந்திய வீரர் நியமனம்! பழைய அணிக்கு கல்தா! 2

மும்பையில் நேற்று நடந்த பஞ்சாப் அணியின் போர்டு மீட்டிங்கில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மும்பை இந்தி யன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட ஐ.பி.எல் அணிகளுக்கு இதற்கு முன் பயிற்சியாளராக இருந்துள்ளார் கும்ப்ளே.

பஞ்சாப் அணி, இதுவரை ஐ.பி.எல் கோப்பையை வென்றதில்லை. கடந்த இரண்டாண்டுகளாக அந்த அணி பிளே – ஆப் சுற்றைக் கூட தாண்டவில்லை. இதனால் அந்த அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அணியின் கேப்டன் அஸ்வின், டெல்லி அணிக்கு மாற இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது அஸ்வினை டெல்லி அணிக்கு மாற்ற இருப்பதாக தகவல் உறுதியாகின. ஆனால் அதிலும் ஒரு பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இருப்பவர் சௌரவ் கங்குலி. அவர் அஸ்வினை, டெல்லி அணியில் சேர்க்க வேண்டும் என ஆலோசித்து முடிவு எடுத்துள்ளார்.

தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அஸ்வினிடம் பண விவகாரத்தில் பெரும் சிக்கலினை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் அணியின் இயக்குனர் மாற்றம்: முன்னாள் இந்திய வீரர் நியமனம்! பழைய அணிக்கு கல்தா! 3
Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI

டெல்லி அணியின் சார்பில், அஸ்வின் 7.6 கோடி கொடுத்து வாங்க முடிவு செய்துள்ளனர்.

அப்போ என்னதான் பிரச்சினை என்கிறீர்களா? ஐபிஎல் விதிகளின் படி ரூல்ஸை பாலோ பண்ண மறுக்கிறது கிங்ஸ் லெவன்.

ஒரு வீரரை அணி மாற்றம் செய்தால், அந்த வீரரின் தற்போதைய சம்பளத்தை நிச்சயம் கொடுக்க வேண்டும். அதேபோல், ஏற்கனவே உள்ள அணிக்கு ஈட்டுத்தொகை போல் வழங்க வேண்டும், அந்த ஈட்டுத் தொகையில் வீரருக்கு பாதித் தொகையினை வழங்க வேண்டும்.

ஆனால் கிங்ஸ் லெவன் அஸ்வினுக்கு பணம் தர முன் வராததால் பிரச்சினை எழுந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *