இந்த வருட சிறந்த பயிற்சியாளர் பட்டியளில் இவர்!! 1

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் அணில் கும்ப்ளே இந்த வருடத்தில் சிறந்த பயிற்சியாளருக்கான போட்டியில் உள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவின் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பயிற்சியாளர்கள் உள்ளனர்.

ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் பிஸ்பேஷ்வர் நந்தி, கபடி பயிற்சியாலர் பல்வான் சிங், ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் மற்றும் கோல்ஃப் பயிற்சியாளர் விஜய் தேவெச்சா ஆகியோருடன் சிறந்த பயிற்சியாளர் போட்டியில் இருக்கிறார் கும்ப்ளே.Anil Kumble | Indian cricket team |

இந்த தரத்தினை ஆர்.பி-எஸ்.ஜி குழுமம் மறூர்ம் விராட் கோலி அறக்கட்டளை சார்பில் கொடுப்படுகிறது. விராட் கோலி அறக்கட்டளை கும்ப்ளேவை நாமினேட் செய்துள்ளது. இந்த விருதை கும்ப்ளே வெல்லுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர்களின் அனில் கும்ளேவும் ஒருவர். 2007-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் அனில் கும்ளே. ஒருநாள் போட்டிகளில் 619 விக்கெட்டுகளும், டெஸ்ட்போட்டிகளில் 337 விக்கெட்டுகளையும் கைப்பற்றியவர்இந்த வருட சிறந்த பயிற்சியாளர் பட்டியளில் இவர்!! 2

10 விக்கெட்டுகளையும் ஒரே இன்னிங்ஸில் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரும் அனில் கும்ளே தான். கடந்த 2007-ம் ஆண்டு அனில் கும்ளே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 37-வயது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டே, அதாவது 2008-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார் அனில் கும்ளே. எனினும் அவர் தொடர்ந்து கிரிக்கெட் உலகத்தில் தான் இருந்து வருகிறார்.இந்த வருட சிறந்த பயிற்சியாளர் பட்டியளில் இவர்!! 3

கொல்கத்தா கிரிக்கெட் அசோசியேசன் தலைவராகவும், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார். அனில் கும்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த சமயத்தில், இந்திய அணி நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளை உள்ளூரில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்றது. பின்னர், விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அனில் கும்ளே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *