ரவீந்திர மிம்ரோத் (24 வயது) மற்றும் திராஜ் சர்வான் (23 வயது) ஆகியோரை எஸ்.பி அமரேந்திர சிங் கைது செய்தார். இந்தியா – ஆஸ்திரேலியா விளையாடிய 3வது போட்டி இண்டோர் மைதானத்தில் நடந்தது, இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை மோசடி செய்து விற்று வந்ததால் அவர்களை கைது செய்தார்கள்.
அவர்களிடம் இருந்து 5 டிக்கெட்களை பறிமுதல் செய்தது போலீஸ். மேலும் அவர்கள் 40 போலி டிக்கெட்டுகளை அச்சடித்துள்ளார்கள். அவர்கள் ஏற்கனவே 40 ஆயிரம் ரூபாய்க்கு 31 டிக்கெட்டுகள் விற்று இருப்பதாக போலீஸ் கூறியது.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது இந்தியா. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 300க்கு மேல் அடிப்பார்கள் என நினைத்தபோது, இந்திய பந்துவீச்சாளர்களால் ஆஸ்திரேலிய அணி 293 ரன் அடித்தது.
இந்த இலக்கை துரத்திய ரோஹித் ஷர்மா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் சிறப்பாக விளையாட, அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா சில வாணவேடிக்கைகளை காட்டினார். இதனால், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசால்ட்டாக வெற்றி பெற்றது.