விராட் கோலியுடன் விரைவில் திருமணம் என்று வெளியான தகவலை பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா காட்டமாக மறுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிப்பது அனைவருக்கும் தெரிந்த கதைதான். இந்நிலையில் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கும் காரணத்தால், கேப்டன் கோலி தனக்கு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கும் படி கேட்டுக்கொண்டார்.
இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்த படங்களை அவர்களே வெளியிட்டு இருந்தனர். தொடக்கத்தில் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் மீண்டும் ஒன்றாக இணைந்தனர். இந்நிலையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் எழுந்தது.
இது பெரும் வாக்கு வாதத்தையே ஏற்படுத்தியது. தவிர, கோலி, அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொள்ளத்தான் இந்த ஓய்வுக்கு விண்ணப்பித்ததாக தவறான தகவல்கள் காட்டுத்தீ போல பரவியது. இந்நிலையில் இதை பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா காட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து அனுஷ்கா சர்மா கூறுகையில்,’ எங்கிருந்து இது போன்ற வதந்திகள் கிளம்புகிறது என தெரியவில்லை. இப்படி பொய்யான செய்தி வெளியிடுவதற்காகவே ஒரு கும்பல் உள்ளது என நினைக்கிறேன். அது எதுவாக இருந்தாலும் சரி அதில் உண்மையில்லை.’ என்றார்.