வருடாவருடம் ஐபில் ஆட்டங்களில் மட்டுமல்ல அதன்மூலம் புக்கிகள் எனப்படும் சூதாட்டகார்களால் சட்டவிரோதமாக நடத்தப்படும் சூதாட்டத்தின் விருவிருப்பிற்கும் பஞ்சமே இல்லை.
பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அர்பாஸ்கான் க்கு ஐபில்’ன் தொடக்க வருடமான 2008ம் ஆண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அது குறித்து விசாரிக்க தானே நகர காவல் துறையினரால் சம்மன் அனுப்பப்பட்டது. இது குறித்து பிசிசிஐ நிர்வாகத்திடம் கேட்டபோது, காவல்துறை விசாரணைக்கு பின்னரே எதையும் கூற முடியுமென தெரிவித்துள்ளார் பிசிசிஐ ஊழல் ஒழிப்புதுறை அதிகாரியான அஜித் சிங். அவர் மேலும் காவல்துறை விசாரணைக்கு முன்னதாகவே கருத்து தெரிவிப்பது வழக்கின் திசைப்போக்கையே மாற்றிவிடும் எனவும் கூறியுள்ளார்.
விசாரணையில், சூதாட்டதில் அர்பாஸ்கான் சுமார் 2.8 கோடி பணம் இழந்ததாகவும் அதை புக்கியான சோனு ஜலால் தரவேண்டும் எனவும் தரமறுத்ததால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு ஜலால் காவல்துறை சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், ஜலாலை விசாரிக்கையில், ஐபில் மட்டுமல்லாது இன்னும் பல தொடர்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கடந்த 2016ம் ஆண்டு நடந்த இலங்கை ஆஸ்திரேலியா தொடரில் ஒரே நாளில் 21 விக்கெட்டுகள் வீழ்ந்த போட்டியிலும் சூதாட்டம் நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் கொல்கத்தாவை சேர்ந்த இளம் தொழிலதிபரும் இன்னும் சில புக்கிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது
இதுமட்டுமின்றி பாக்கிஸ்தான் உள்ளூர் தொடரிலும் இவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.