டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட அணி அறிவிப்பு: முன்னணி வேகப்பந்துவீச்சாளர் இல்லை!! 1

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து 12 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இந்த போட்டி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) ஹெடிங்லியில் தொடங்குகிறது. இந்த அணியில் மீண்டும் அணிக்குள் வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடம் கிடைக்கவில்லை.

மூன்றாவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:

ஜோ ரூட் (கே), பென் ஸ்டோக்ஸ் (துணை கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ் (கே), ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரான், ஜோ டென்லி, ஜாக் லீச், ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ்

 

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து அணி 258 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 250 ரன்களும் எடுத்தன. 8 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது.

டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட அணி அறிவிப்பு: முன்னணி வேகப்பந்துவீச்சாளர் இல்லை!! 2

5-வது மற்றும் கடைசி நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. தனது 7-வது சதத்தை பூர்த்தி செய்த பென் ஸ்டோக்ஸ் 115 ரன்களுடனும் (165 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), பேர்ஸ்டோ 30 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 267 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்திருந்த போது, இந்த போட்டி டிராவில் முடிந்தது. அதிகபட்சமாக லபுஸ்சேன் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டிராவிஸ் ஹெட் 42 ரன்களுடனும், கம்மின்ஸ் 1 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 1997-ம் ஆண்டுக்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் ஆஷஸ் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது இதுவே முதல்முறையாகும்.டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட அணி அறிவிப்பு: முன்னணி வேகப்பந்துவீச்சாளர் இல்லை!! 3

முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட இந்த போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடை யிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் அளித்த பேட்டியில், ‘ஸ்டீவன் சுமித் நல்ல நிலையில் உள்ளார். காயம் அடைந்த அன்று அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவில் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. ஆனால் மறுநாள் அவருக்கு தலைவலி இருப்பதாக தெரிவித்ததுடன் போட்டியில் இருந்தும் விலகினார். அவர் எடுத்த முடிவு சரியானதாகும். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு சகஜ நிலைக்கு வந்து விடுவார் என்று நம்புகிறோம். இருப்பினும் தற்போது எதுவும் உறுதியாக சொல்ல முடியாது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்து லபுஸ்சேன் முகத்தில் பலமாக தாக்கிய நிலையிலும் அவர் தொடர்ந்து ஆடியது சிறப்பான விஷயமாகும். ஜோப்ரா ஆர்ச்சர் சிறந்த பந்து வீச்சாளர். அவரது பந்து வீச்சை சரியாக கணித்து விளையாட வேண்டியது அவசியமானதாகும்’ என்று தெரிவித்தார்.டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட அணி அறிவிப்பு: முன்னணி வேகப்பந்துவீச்சாளர் இல்லை!! 4

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் கருத்து தெரிவிக்கையில், ‘வானிலையை நாம் கட்டுப்படுத்த முடியாது. மழை குறுக்கீடு இல்லாமல் இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்து இருக்கலாம். முதல் டெஸ்ட் போட்டி தோல்வியில் இருந்து மீண்டு வந்து இந்த ஆட்டத்தில் டிரா கண்டு இருப்பது நல்ல உத்வேகமாகும். இந்த உத்வேகத்தை எஞ்சிய போட்டிகளில் தொடருவோம். பென் ஸ்டோக்ஸ் அருமையான இன்னிங்ஸ் ஆடினார். ஜோப்ரா ஆர்ச்சர் பதற்றமின்றி சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *