இவர் அணியில் இருந்திருந்தால் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியிருப்பார்: ரிக்கி பாண்டிங் வேதனை 1

ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் இருந்திருந்தால் அற்புதமாக ஆடிய பென் ஸ்டோக்சின்ன் விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து வீழ்த்தியிருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான ஆஷஸ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. கதாநாயகனாக ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இந்த போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 2 ரன் தேவையாக இருந்த போது, ஜாக் லீச்சுக்கு மிக எளிதான ரன்-அவுட் வாய்ப்பை நாதன் லயன் தவற விட்டார். அத்துடன் அதே ஓவரில் பென் ஸ்டோக்ஸ் முட்டிப்போட்டு பந்தை விளாச முயற்சித்த போது பந்து பேட்டில் படாமல் அவரது காலுறையை தாக்கியது.

இவர் அணியில் இருந்திருந்தால் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியிருப்பார்: ரிக்கி பாண்டிங் வேதனை 2
LEEDS, ENGLAND – AUGUST 25: England batsman Jos Buttler is run out from a direct throw from Travis Head ( not pictured) as Nathan Lyon looks on during day four of the 3rd Ashes Test Match between England and Australia at Headingley on August 25, 2019 in Leeds, England. (Photo by Stu Forster/Getty Images)
உடனே ஆஸ்திரேலிய வீரர்கள் எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டனர். ஆனால் நடுவர் விரலை உயர்த்தவில்லை. டி.வி. ரீப்ளேயில் பந்து மிடில் ஸ்டம்பை துல்லியமாக தாக்குவது தெரிந்தது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியா வசம் டி.ஆர்.எஸ். வாய்ப்பு இல்லாததால் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய முடியவில்லை. நடுவர் சரியான தீர்ப்பை வழங்கியிருந்தால் ஆஸ்திரேலியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கும்.இங்கிலாந்தின் சிறந்த சேசிங்

டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ‘சேசிங்’ இது தான். இதற்கு முன்பு 1928-29-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 332 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடித்ததே இங்கிலாந்தின் அதிகபட்ச சேசிங்காக இருந்தது. டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இது 4-வது நிகழ்வாகும்.இவர் அணியில் இருந்திருந்தால் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியிருப்பார்: ரிக்கி பாண்டிங் வேதனை 3

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது…

இந்த போட்டியில் ஸ்டோக்ஸ் அற்புதமாக ஆடினார் என்று நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு பல வாய்ப்பு கிடைத்தது. அவற்றை அனைத்தையும் தவற விட்டோம். கடைசியாக வந்த வீரருக்கும்  பல வாய்ப்புகள் கொடுத்தது ஆஸ்திரேலிய அணி.

பந்துவீச்சாளர்கள் சற்று ஆக்ரோஷம் இல்லாமல் இருந்தனர். இந்த இடத்தில் மிட்செல் ஸ்டார்க் இருந்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும். முன்னரே பல விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற செய்திருப்பார் .

இவர் அணியில் இருந்திருந்தால் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியிருப்பார்: ரிக்கி பாண்டிங் வேதனை 4
KKR suffered a big blow, as Mitchell Starc has been ruled out of IPL due to tibial bone stress. The franchise purchased him for Rs 9.40 Crore. Starc’s absence means that KKR does not have a leader in pace attack, now.

இவ்வாறு வேதனையுடன் தெரிவித்தார் ரிக்கி பாண்டிங் ரிக்கி பாண்டிங்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *