ஆஷஷ் 2017/18 : மீண்டு வருமா இங்கிலாந்து? இன்று மூன்றாவது டெஸ்ட்!!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கோப்பை டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

BRISBANE, AUSTRALIA – NOVEMBER 26: Mitchell Starc of Australia celebrates after taking the wicket of Chris Woakes of England during day four of the First Test Match of the 2017/18 Ashes Series between Australia and England at The Gabba on November 26, 2017 in Brisbane, Australia. (Photo by Cameron Spencer/Getty Images)

இதன்பின்னர் அடிலெய்டில் நடந்த 2-ஆவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில், 3-ஆவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

இதிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கவுள்ளது. அதுபோல இனி வரும் மூன்று போட்டிகளிலும் வென்று தொடரைத் தக்க வைக்க இங்கிலாந்து கடுமையாகப் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BRISBANE, AUSTRALIA – NOVEMBER 26: David Warner of Australia celebrates after reaching his half century as Jake Ball of England walks back to his mark during day four of the First Test Match of the 2017/18 Ashes Series between Australia and England at The Gabba on November 26, 2017 in Brisbane, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

இந்நிலையில், 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள பதினோறு பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து புதன்கிழமை அறிவித்தது. அணிகளின் விவரம் பின்வருமாறு,

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், கேமரூன் பென்க்ராஃப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜாஷ் ஹாசில்வுட், நாதன் லயன்.

இங்கிலாந்து:

அலஸ்டைர் கூக், மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), டேவிட் மாலான், மூயின் அலி, ஜானி பேய்ர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கிரேய்க் ஓவர்டன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Editor:

This website uses cookies.