வரலாற்றை மாற்றி எழுதினார் அஷ்வின்!!

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

நாக்பூரில் நடந்து வந்த இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 610-6 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 128 ரன்களும், புஜாரா 143 ரன்களும், ரோஹித் ஷர்மா 102 ரன்களும், கேப்டன் விராட் கோலி 213 ரன்களும் குவித்தனர்.

இதைத் தொடர்ந்து, 405 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் சந்திமல் 61 ரன்களும், சுரங்கா லக்மல் 31 ரன்களும் எடுத்தனர். அஷ்வின் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனால், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கையில் காமகே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை அஷ்வின் படைத்துள்ளார். 54 போட்டிகளில் விளையாடி இச்சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி 56 டெஸ்ட் போட்டிகளில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்

5.சேன் வார்ன் / ஆலன் டொனால்ட் – 63 போட்டி

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள்  ஜாம்பவான் லெக் ஸ்பின் வீரர் சேன் வார்ன் 63 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மேலும், தென்னப்பிரிக்க அணியின் ஆலன் டொனால்டும் 63 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

(Photo Source: Getty Images)
Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Editor:

This website uses cookies.