இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடும் தமிழக வீரர் அஸ்வின், சர்ரே அணிக்கு எதிராக 6 விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஒரு நாள் போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் அஸ்வின், கடந்த 2017 ஆம் வருடம் இங்கிலாந்தில் நடந்த கவுண்டி தொடரில், வொர்சஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடினார். 4 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்நிலையில் இப்போது நாட்டிங்காம்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார். அந்த அணியில், ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பேட்டின்சன் விலகியதை அடுத்து, அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் டிவிஷன் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. இதில், சர்ரே, நாட்டிங் காம்ஷைர் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 240 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அஸ்வின் அபாரமாக பந்துவீசி, 6 விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் பேட்டிங்கை தொடங்கிய நாட்டிங்காம்ஷைர் அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்துள்ளது.
ALL OUT | Ashwin brings an end to the Surrey innings on 240 after Batty (3) tries to slog him but only succeeds in finding the hands of Libby. He finishes with figures of 6-69 off 33 overs ?
Full scorecard ? https://t.co/Blt0ovrIgB pic.twitter.com/pZNt7hF6WO
— Nottinghamshire CCC (@TrentBridge) July 13, 2019
இந்நிலையில்,
மே மாதம் 30-ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று முடிவுக்கு வருகின்றன. 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதி சுற்று இன்று நடைபெறுகிறது. 10 நாடுகள் பங்கேற்ற லீக் போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 நாடுகளும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. இதில் இந்தியாவையை நியூசிலாந்து தோற்கடித்தும் நடப்புச் சேம்பியனான ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து தோற்கடித்தும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிச் சுற்றில் பங்கேற்றதற்குப் பிறகு 28 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்து சென்ற உலகக்கோப்பை போட்டியில்தான் முதல் முதலாக இறுதிச் சுற்றுக்கு வந்தது.
இன்று லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் மதியம் 3 மணிக்குப் போட்டிகள் நடைபெறுகின்றன.