டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சை ஓப்பன் செய்த சுழற்ப் பந்து வீச்சாளர்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற் பந்து வீச்சளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்த சாதனையை இந்தியா இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்த சாதனைய படைத்தார்.
டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சை ஒப்பன் செய்த சுழற் பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியல் :
- ரவி அஷ்வின் (இந்தியா) : 100 விக்கெட்
- ஹுக் ட்ரம்பில் ( ஆஸ்திரேலியா) : 93 விக்கெட்
- பாபி பீல் (இங்கிலாந்து ) : 88 விக்கெட்
- ரங்கனா ஹெராத் (இலங்கை) : 85 விக்கெட்
- காலின் ப்லைத் (இங்கிலாந்து) : 74 விக்கெட்
இது போன்ற பல் வேறு சாதனைகளை அவ்வப்போது நிகழ்த்தி வருகிறார் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்த சானைக்கு முன்னர் தான் மற்றொரு சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையானது , கொழும்பு டெஸ்ட் போட்டியில் இந்திய முதல் இன்னிங்சில் அரைசதம் கண்ட அஸ்வின், 2,000 ரன்களை எட்டியதோடு 2000 ரன்கள்-200 விக்கெட்டுகள் என்ற இரட்டையை விரைவில் எட்டிய 4-வது வீரர் என்ற சாதனைக்குரியவரானார்.
அந்த கட்டூரையை படிக்க : http://tamil.sportzwiki.com/second-test-ashwin-on-song-as-lankans-falter/
250 விக்கெட்டுகள் 2000 ரன்கள் என்ற இரட்டையை அதிவேகமாகச் சாதித்த வீரருமானார் அஸ்வின். இதன் மூலம் இம்ரான் கான், ரிச்சர்ட் ஹாட்லி, இயன் போத்தம் ஆகிய ஜாம்பவான் ஆல்ரவுண்டர்களை விட குறைந்த போட்டிகளில் 250விக். – 2000 ரன்கள் இரட்டையை எடுத்து சாதித்துள்ளார் அஸ்வின்.
ரிச்சர்ட் ஹாட்லி 54 டெஸ்ட் போட்டிகளில் 250-2000 இரட்டையை சாதிக்க போத்தம் மற்றும் இம்ரான் இதே சாதனையை 55 டெஸ்ட் போட்டிகளில் நிகழ்த்தினர்.
ஆனால் 200 விக்கெட்டுகள்-2000 ரன்கள் இரட்டையை போத்தம் 42 டெஸ்ட் போட்டிகளிலும் கபில் மற்றும் இம்ரான் 50 டெஸ்ட் போட்டிகளிலும் எட்ட, அஸ்வின் 4-வது இடத்தில் உள்ளார்.
மேலும் , எப்போதும் டெஸ்ட் போட்டிகளுக்கான தர வரிசை பட்டியளில் முதல் பத்து இடதிற்க்குள் தன்னை தக்க வைத்துக்கொள்ளும் ஒரு வீரர் ஆவார். மேலும் அதிவேகமாக 100 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியளில் முதல் இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல் கடந்த ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதையும் நம்ம தமிழன் ரவிச்சந்திரன் அஷ்வின் தட்டிச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த கட்டூரையில் விவரிக்கப் பட்ட சாதனைகள் யாவும் அவரின் சில சாதனைகளே ஆகும். இன்னும் பல சாதனைகள் யாவும் பட்டியளிடப்படாமல் உள்ளது. அவற்றை பின்னர் மற்றோர் கட்டூரையில் காண்போம்.