முத்தரப்பு டி20 தொடர்- ஜிம்பாப்வேயை 100 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா 1
ஜிம்பாப்வேயில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக ஆரோன் பிஞ்ச் ஆட்டத்தில் அனல் பறந்தது.முத்தரப்பு டி20 தொடர்- ஜிம்பாப்வேயை 100 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

50 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்த பிஞ்ச், 76 பந்தில் 16 பவுண்டரி, 10 சிக்சருடன் 172 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷார்ட் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 19.2 ஓவரில் 223 ரன்கள் குவித்தது. இவர்கள் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது.

முத்தரப்பு டி20 தொடர்- ஜிம்பாப்வேயை 100 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா 2

பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலியாவின் நேர்த்தியான பந்து வீச்சால் ஜிம்பாப்வே அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிராக 6 போட்டியில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா, இந்த முத்தரப்பு தொடரில் தொடர்ந்து இரண்டு வெற்றிகளை ருசித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *