சச்சின் பிறந்தநாள்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சீப் மெண்டாலிட்டி! 1

சச்சினை சிறுமைப்படுத்துவதாக நினைத்து மல்லாக்க படுத்து, எச்சில் துப்பி இருக்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

இன்று சச்சினின் பிறந்தநாள். எப்போதும் போல் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சச்சினை வாழ்த்திக் கொண்டிருக்க, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கிரிக்கெட் ரசிகர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது.சச்சின் பிறந்தநாள்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சீப் மெண்டாலிட்டி! 2

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேமியன் ஃபிளமிங். இவருக்கும் இன்று பிறந்தநாள். இவரை பாராட்டும் விதமாக, சச்சினை அவர் ஒரு போட்டியில் போல்ட் செய்யும் வீடியோவை பதிவிட்டு, பிளமிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

 

 

இங்கே, நாம் விமர்சிப்பது இரண்டு விஷயத்தை மட்டுமே.

1) ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேனை அவுட்டாக்கும் வீடியோவை பதிவிட்டு, தன் நாட்டின் பவுலருக்கு பெருமை சேர்க்கும் விதமாக பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இன்று சச்சினுக்கும் பிறந்தநாள் என்பது அவர்களுக்கு தெரிந்தும், இவ்வாறு பதிவிட்டு இருப்பது தான் விமர்சிக்க வேண்டிய இடத்திற்கு வருகிறது. இது ஆரோக்ய போட்டியாக எடுத்துக் கொள்ள முடியாது.சச்சின் பிறந்தநாள்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சீப் மெண்டாலிட்டி! 3

2) இந்த சீப்பான செயலை செய்திருப்பது ஒரு கிரிக்கெட் வீரரோ, ஒரு தனிப்பட்ட கிரிக்கெட் ரசிகரோ அல்லது வேறு யாரோ அல்ல.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இவர்கள் எப்படி வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தண்டனை கொடுக்க முடியும்? நீங்களே இவ்வளவு சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளும் பொழுது, உங்களில் ஒருவனாய் வளர்ந்து நிற்கும் வார்னரும், ஸ்மித்தும் அப்படித் தானே இருப்பார்கள்!. பிறகு, அவர்களுக்கு மட்டும் தண்டனை ஏன்?

சரி இதைக் கூட விட்டு விடலாம். இதற்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு காரியம் செய்திருக்கு பாருங்க.. அதுதான் அல்டிமேட்.

‘ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, சச்சினின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கிளாசிக் ஒருநாள் போட்டியை இங்கே பதிவிடுகிறோம்’ என்று ட்வீட் செய்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டியில் சச்சின் சிறப்பாக ஆடிய வீடியோவை போஸ்ட் செய்துள்ளனர். எப்படி…? ரசிகர்களின் வேண்டுகளை ஏற்று அவரை பாராட்டி வீடியோ போடுகிறார்களாம்.

 

ரசிகர்களை இதனை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள ரசிகர்கள் மட்டுமல்ல, பொதுவான கிரிக்கெட் ரசிகர்களும், ஆஸி., கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயல்பாடுகளை எதிர்த்து கருத்துகளை பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக, சச்சினை சிறுமைப்படுத்துவதாக நினைத்து மல்லாக்க படுத்து, எச்சில் துப்பி இருக்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *