ஜிம்பாப்வே நாட்டில் நடந்து வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் பலப்பரிட்சை நடத்த உள்ளது.
ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுவரும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரை விளையாடி வருகிறது.
கடந்த ஜூலை 1 ம் தேதி ஹராரே மைதானத்தில் தொடங்கபட்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய மூன்று அணிகளும் தலா நான்கு போட்டிகளில் விளையாடினர்.
தொடரை நடத்திய ஜிம்பாப்வே அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை தழுவி ரசிகர்களை ஏமாற்றியது.
இதில் புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிபோட்டியில் முன்னேறும். இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா மூன்று வெற்றிகளை பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறினர்.
இந்நிலையில் ஹராரே மைதானத்தில் ஞாயிற்றிகிழமை (இன்று) நடக்கும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் -ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
இந்த தொடரின் மூலம் ஆஸி அணி நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஃபார்மில் உள்ளது. இங்கிலாந்திடம் வாங்கிய தர்ம அடியை பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸி.,க்கு இந்த தொடர் அமைந்துள்ளது.
மேலும் ஆஸி அணி இந்த தொடரில் பேட்டிங், பவுலிங் என அனைத்து தரப்பிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த உள்ளதால் இன்றைய இறுதி போட்டி அவர்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.