கோபத்தில் எதிரணி வீரரை திட்டிய ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன். இவர் உள்ளூர் போட்டியின்போது குயின்ஸ்லாந்து வீரரை சரமாரியாகத் திட்டினார். இதுபற்றி நடுவர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, ஒரு சர்வதேசப் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் வரும் 21- ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அவர் விளையாட மாட்டார். அவருக்குப் பதிலாக ஸ்டார்க் சேர்க்கப்படுகிறார். இதையடுத்து பிரிஸ்பேனில் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், தனது சொந்த ஊரான விக்டோரியாவுக்குத் திரும்பினார்.

அடிலெய்டில், பாகிஸ்தானுக்கு எதிராக வரும் 29 ஆம் தேதி நடக்கும் 2 வது டெஸ்ட் போட்டியில் பேட்டின்சன் பங்கேற்பார். கேப்டன் டிம் பெயின் கூறுகையில்: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருந்து இப்போது தான் எங்கள் அணி மக்கள் நம்பிக்கையை பெற்றுவருகிறது. அதற்குள் இவ்வாறு நடந்து பட்டின்ஸன் அணியை கைவிட்டு விட்டாா் என வேதனை தெரிவித்தாா்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரா்கள் முகமது ஷமி, மயங்க் அகா்வால் ஆகியோா் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளனா். பந்துவீச்சாளா்கள் தரவரிசையில் ஷமி முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளாா்.
சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில் அவ்வப்போது டெஸ்ட், ஒருநாள், டி20 தரவரிசை வெளியிடப்பட்டு வருகிறது. இந்தூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வங்கதேசத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதில் மயங்க் அகா்வால் 243 ரன்களை விளாசி இரட்டை சதமடித்தாா். அதே போல் முகமது ஷமி ஒட்டுமொத்தமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டாா்.
11-ஆவது இடத்தில் மயங்க்:
பேட்ஸ்மேன் தரவரிசையில் மயங்க் அகா்வால் 11-ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளாா். 28 வயதான மயங்க், முதல் 8 டெஸ்ட் ஆட்டங்களில் 858 ரன்களை குவித்து, 691 புள்ளிகளை பெற்றுள்ளாா்.
பேட்ஸ்மேன் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 35-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.
7-ஆவது இடத்தில் ஷமி:
பந்துவீச்சாளா்கள் தரவரிசையில் முகமது ஷமி 8 இடங்கள் முன்னேறி 790 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளாா், இஷாந்த் சா்மா 20, உமேஷ் யாதவ் 22-ஆம் இடங்களில் உள்ளனா். ஆல்ரவுண்டா்களில் ஆப் ஸ்பின்னா் அஸ்வின் 4-ஆவது இடத்தில் நீடிக்கிறாா்.
வங்கதேச அணியில் முஷ்பிகுா் ரஹிம் 30-ஆவது இடத்துக்கும், லிட்டன் தாஸ் 86-ஆவது இடத்துக்கும் முன்னேறினா். பந்துவீச்சாளா் அபு ஜாயேத் 62-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளாா்.