இந்தியாவிற்கு எதிரான தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய அணி வரும் செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. அதற்கான ஆஸ்திரேலியா அணி போது அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இன்னும் அதற்கான அட்டவணையும் போட்டி நாள் அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா ஒரு நாள் அணி விவரம் :

 

ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர்,  அஸ்டன் அகர்,  ஹில்டன் கார்ட்ரைட், நேதன் கூல்டர்நைல், பேட்ரிக் கம்மின்ஸ், ஜேம்ஸ் ஃபால்க்னர்,  ஆரோன் ஃபின்ச், ஜோஷ் ஹசல்வுட், ட்ராவிஸ் ஹெட், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), ஆடம் ஜாம்ப்பா

டி20 அணி : ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர்(துணை கேப்டன்), ஜேசன் ஃபெகன்ட்ராஃப், டேன் கிர்ஸ்டன், நேதன் கூல்டர்நைல், பேட்ரிக் கம்மின்ஸ், ஆரோன் ஃபின்ச், ட்ராவிஸ் ஹெட், க்ளென் மேக்ஸ்வெல், டிம் பெய்ன் (விக்கெட் கீப்பர்), ஆடம் ஜாம்ப்பா , கேன் ரிச்சர்ட்சன்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒருநாள் தொடருக்கு 14 பேர் கொண்ட அணியையும்  t 20 தொடருக்கு 13 பேர் கொண்ட தனி அணியையும் அறிவித்துள்ளது இரு அணிகளுக்கு கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தான் செயல்படுவார் என அறிவித்துள்ளது

இரு அணிகளிலும் விளையாடுபவர்கள்  ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர்(துணை கேப்டன்), நேதன் கூல்டர்நைல், பேட்ரிக் கம்மின்ஸ், ஆரோன் ஃபின்ச், ட்ராவிஸ் ஹெட், க்ளென் மேக்ஸ்வெல்,ஆடம் ஜாம்ப்பா ஆகியோர் ஆவர்தி இரு அணிகளுக்கும் வெவ்வேறு விக்கெட் கீப்பர்கள் செயல்படுவர்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக முதல் போட்டியிலேயே விளகிய மிட்செல் ஸ்டார்க் அணியில் இடம்பெறவில்லை. அவரை இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஆசஸ் தொடரில் பங்கேற்க வைக்க அவருக்கு ஓய்வு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் ஹில்டன் கார்ட்ரைடிற்கு ஒருநாள் போட்டியில் சர்வதேச அளவில் விளையாட அறிமுகம் கிடைக்கும் என தெரிகிறது. அதேபோன்று, ஜேசன் ஃபெகன்ட்ராஃபிற்கும் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகம் கிடைக்கலா இருவரும் தத்தம் அணிகளில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Hilton Cartwright poses during the Western Australia headshots session at WACA on September 19, 2016 in Perth, Australia.

டி20 தொடருக்கு டேவிட் வார்னர் துணை கேப்டனாக செயல்படுவார். கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு டேன் கிர்ஸ்டைன் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஆடுகளங்கள் மிகவும் பரிச்சயமானது என்பதற்காக ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னெருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரில்  சிறப்பாக செயல்பட்டார் ஜேம்ஸ்.

டிம் பெய்ன் டி20 தொடருக்கு விக்கெட் கீப்பராகவும் மேத்யூ வேட் ஒருநாள் தொடருக்கு விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார்கள். மேலும் ஒருநாள் தொடருக்கு துணைக் கேப்டன் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணிகள் முழு பலமும் பொருந்திய இந்திய அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மோத உள்ளது. இந்திய மண்ணில் இந்தியாவின் கையே மேலோங்கி

இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Editor:

This website uses cookies.