ஆஸ்திரேலியப் பயிற்சிப் போட்டி இன்று!!
ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. முதல் போட்டி வரும் 17-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் அணி இடையிலான பயிற்சி ஆட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்.
அதற்கு முன்னதாக இன்று பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கிறது. சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய வாரியத் தலைவர் அணி மோதுகிறது. இதில் வாஷிங்டன் சுந்தர், ராகுல் திரிபாதி, சந்தீப் ஷர்மா, நிதிஷ் ராணா உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பயிற்சி ஆட்டத்தை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம். சி, டி மற்றும் இ ஸ்டாண்டுகளின் கீழ் பகுதியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விராத் கோலியை கட்டுப்படுத்துவதே எங்களது நோக்கமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி வரும் 17-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
இந்தப் போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீபன் ஸ்மித் செய்தியாளர்களிடம் கூறும்போது,
‘இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோலியை கட்டுப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம்.
அவர் சிறந்த வீரர். ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.
இந்த தொடரில் அவரை அதிகமாக ரன் குவிப்பதில் இருந்து தடுத்துவிட முடியும் என நினைக்கிறேன்.
இதை நாங்கள் சரியாக செய்தால் இந்த தொடரில் நாங்கள் சில வெற்றிகளை பெற வாய்ப்பிருக்கிறது.
எங்கள் வீரர்கள், சமீப காலமாக சுழற்பந்து வீச்சில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஒரு நாள் போட்டியில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்காது என்று நம்புகிறேன்.
எங்களது சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இங்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் அவருக்கு இருக்கிறது. இந்திய அணியில் அக்ஷர் பட்டேல், சாஹல், குல்தீப் யாதவ் போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
தொடர் முழுவதும் அவர்களை நாங்கள் சரியாக எதிர்கொள்வது முக்கியம். இந்தியாவுக்கு எதிராக மோதுவது எப்போதும் கடினமானதுதான்’ என்றார்.