கடந்த 12 மாதங்களாக ஒரு திட்டத்துடன்தான் உள்ளோம்: புதிய குண்டை தூக்கிப்ப்போட்ட ஆஸி துணை கேப்டன் 1

இக்கட்டான சூழ்நிலை முடிந்து சகஜ நிலைக்கு திரும்பியதும் டி20 போட்டிகளில் விளையாட வீரர்கள் தயாராக உள்ளனர் என அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் அனைத்து வி்ளையாட்டு போட்டிகளிலும் முடங்கியுள்ளன. இனிமேல் கிரிக்கெட் எப்போதும் தொடங்கும் என்று யாராலும் தெளிவாக கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா ஆறு மாத காலத்திற்கு அதனுடைய எல்லையை மூடியுள்ளது. அதனடிப்படையில் பார்த்தால் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வரை அந்நாட்டில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பில்லை. அக்டோபர் – நவம்பர் மாதத்தில் அங்கு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.கடந்த 12 மாதங்களாக ஒரு திட்டத்துடன்தான் உள்ளோம்: புதிய குண்டை தூக்கிப்ப்போட்ட ஆஸி துணை கேப்டன் 2

ஒருவேளை அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தால் உலக கோப்பை தொடருடன் தடைபட்ட கிரிக்கெட் விளையாட்டுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை நேரடியாக உலக கோப்பையில் விளையாடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் எங்கள் அணி வீரர்கள் தயாராக உள்ளனர். ஏற்கனவே டி20-க்கான அணி கட்டமைக்கப்பட்டுவிட்டது என ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அலெக்ஸ் கேரி கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய அணி வீரர்கள் குழுவாகவும், நிலைத்தன்மையுடனும் இருக்கிறார்கள். எங்களுடைய தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் என்பது எங்களுக்குத் தெரியும். டாப் ஆர்டர் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித் களம் இறங்குவார். கடந்த 6 முதல் 12 மாதங்களாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் லைன்-அப்பை வைத்துள்ளோம். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்கக்கூடியவர்கள்.

கடந்த 12 மாதங்களாக ஒரு திட்டத்துடன்தான் உள்ளோம்: புதிய குண்டை தூக்கிப்ப்போட்ட ஆஸி துணை கேப்டன் 3
NOTTINGHAM, ENGLAND – JUNE 06: Steve Smith of Australia celebrates his half century during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Australia and the West Indies at Trent Bridge on June 06, 2019 in Nottingham, England. (Photo by David Rogers/Getty Images)

அதேபோல் எங்களுடைய பந்து வீச்சாளர்களின் பலத்தையும் அறிந்திருப்பீர்கள். சுழற்பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, ஆஷ்டோன் அகர் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.

இனிமேல் எப்போது மைதானம் சென்று விளையாடுவோம் என்பது குறித்து என்னால் கூற இயலாது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இது பயன்தரக் கூடிய ஓய்வு. கோடைக்கால கிரிக்கெட் போட்டிகளை நாங்கள் வெற்றிகரமாக முடித்துவிட்டோம்.

இதனால் வீரர்கள் புத்துணர்ச்சி பெற்று கிரிக்கெட் விளையாட அனுமதி கிடைத்தவுடன் விளையாட தயாராகிவிடுவார்கள். அது ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, டி20 உலக கோப்பை போட்டியாக இருந்தாலும் சரி’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *