விராட் கோலியை அவமதித்த, ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்

இந்திய கேப்டன் விராட் கோலியை அவமதித்த ஆஸ்திரேலிய பத்திரிக்கயாளர் டென்னிஸ் ஃப்ரீட்மேனை மிகக் கடுமையாக கண்டித்துள்ளார் கங்குலி.

பாகிஸ்தானில் நடக்கும் உலக லெவன் டி20 போட்டியில் இந்திய வீரர்கள் ஓங்கு கொள்ளவில்லை என மிக மோசமாக, இனதிய கேப்டன் விராட் கோலியை அவமதிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் அந்த ஆஸ்திரேலியப் பதிரிக்கையாளர்.

முன்னொரு காலத்தில் இந்தியாவின் தூய்மை இந்தியா திட்டத்திற்காக விளம்பரப்டத்தும் நடவைக்கையில் இருந்து விராட் கோலி மற்றும் அவரது அணி வீரர்கள் கொலகத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கூட்டுவது போன்று ஒரு புகைப்ப்டத்தை எடுத்திருந்தனர்.

 

அந்த புகைப்படத்தை வைத்து, உலக லெவன் அணிக்காக மைதனத்தி சுத்தப்படுத்தி வருகிறார்கள் என பதிவிட்டிருந்தார் அந்த பத்திருக்கையாளர்.

இதற்கு பதிலளித்த இந்திய முன்னால் கேப்டன் கங்குலி,

விராத் கோலி போன்ற ஒரு வீரரை இவ்வாறு இழிவு செய்தல் மிகத்தவறு. இது போன்ற தேவை இல்லாத விசயங்களை விராத் கோலி கண்டுகொள்ளக் கூடாது. இது போன்ற வேலைகள் ஆஸ்திரேலியாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

எனக் கூறினார் கங்குலி.

இதனைப் பற்றி க்ளார்க் கூறியதாவது,

சில சமயங்களில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் விராட் கோலியை மரியாதைக் குறைவாகத்தான் நடத்துகின்றன. ஆனால், கோலி இதனைப் பொருட்டாக எடுத்துக்கொள்ள கூடாது.

எனக் கூறினார் க்ளார்க்.

இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்காக இங்கு வந்துள்ள ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் நிருபர்கள் கேள்வி ஒன்றிற்கு நகைச்சுவையாக பதில் அளித்தார்.

அதாவது ஹர்பஜன் சிங் டெஸ்ட் தொடரின் போது இந்த ஆஸ்திரேலிய அணிதான் இந்தியாவுக்கு வந்ததிலேயே பலவீனமான அணி எனவே ஒயிட்வாஷ் உண்டு என்றார்,

ஆனால் ஆஸ்திரேலியா 1-2 என்று கவுரவமாகத் தோற்றது. இதே கேள்வியைத் தற்போது ஒருநாள் போட்டிகளுக்காக வந்துள்ள ஆஸ்திரேலிய அணி பலவீனமான அணியா என்று நிருபர் கேட்டதற்கு பதில் அளித்த கிளார்க், “நான் முட்டாள்தான்,

ஆனால் நாளை உங்களுக்கு முதல் பக்கத் தலைப்புச் செய்தியைத் தருமளவுக்கு முட்டாள் அல்ல” என்றவுடன் அனைவரும் சேர்ந்து சிரித்தனர்.

உடனே சீரியசான கிளார்க், “ஆஸ்திரேலிய அணி தங்கள் ஆற்றல்களை சீரான ஆட்டத்திறனாக மாற்ற இந்தத் தொடர் நல்ல வாய்ப்பு.

இந்த அணியில் நல்ல திறமையான வீரர்கள் உள்ளனனர், இவர்கள் தங்கள் திறமையை நம்பி செயல்பட வேண்டும்.

சவுரவ் கங்குலி, விராட் கோலி தலைமைத்துவத்தில் ஒற்றுமைகள் தெரிகிறது. சவுரவ் கங்குலியால் ஏற்பட்ட சூழ்நிலைக்கு அவரைப் பாராட்ட வேண்டும்.

அவர் ஒரு போதும் பின் இருக்கைக்குச் செல்ல மாட்டார், தோனி, கோலி, அனில் கும்ப்ளே ஆகியோரும் தங்கள் பாணியில் இதனைச் செய்துள்ளனர்.

ஆக்ரோஷமான தலைவரால் வழிநடத்தப்படும் தற்போதைய இந்திய அணி தோல்வியடைய விரும்புவதில்லை

ஆஸ்திரேலியா 4-1 என்று வென்றால் மீண்டும் முதலிடம் பிடிக்கும். 2019 உலகக்கோப்பைக்கு இன்னும் நாட்கள் உள்ளன

, ஆனால் நாங்கள் விருப்பப்பட்ட அளவுக்கு வெற்றிகளைப் பெறவில்லை என்பது உண்மை.

மேலும் ஐபிஎல் மூலமாக இந்திய மண்ணை நன்றாக அறிந்த இந்த வீரர்கள் எளிதில் சூழலுக்கேற்ப மாற வேண்டும், மாறுவார்கள்,

இதில் சாக்குப் போக்குக்கே இடமில்லை” என்றார் மைக்கேல் கிளார்க்.

யார் சிறந்த பேட்ஸ்மென் விராட் கோலியா, ஸ்டீவ் ஸ்மித்தா என்று கேட்ட போது, “விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடுகிறார்,

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ஸ்மித் அவரை விட ஒருபடி மேலே இருக்கிறார். கேப்டன்சியில் இருவருமே சமமானவர்கள், முன்னேறி வருகிறார்கள்.

விராட் முன்னிலையில் உள்ளார், காரணம் அவர் அணி வெற்றிகளைப் பெற்று வருகிறது.

ஒருவர் எவ்வளவு ரன்கள் எடுக்கிறார் என்பதல்ல விஷயம் அது அணியின் வெற்றியைத் தீர்மானிக்கிறதா என்று பார்கக் வேண்டும்” என்றார் மைக்கேல் கிளார்க்.

Editor:

This website uses cookies.