இந்த பையன் ஒரு சூறாவளி.. பங்களாதேஷ் போட்டிப்பாம்பு மாதிரி அடங்கிட்டாங்க – முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா புகழாரம்!

பங்களாதேஷ் அணியுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அசத்திய அக்சர் பட்டேலை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.

பங்களாதேஷ் சென்று ஒருநாள் தொடரை விளையாடிய பிறகு தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது இந்திய அணி. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே சிட்டோகிரம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற முடிந்திருக்கிறது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 404 ரன்கள் அடித்தது. அடுத்ததாக பங்களாதேஷ் அணி 150 ரன்கள் முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனது. இதில் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 258 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது. 513 ரன்களை துரத்திய பங்களாதேஷ் அணிக்கு துவக்கம் நன்றாக அமைந்தாலும் முடிவு எதிர்பார்த்த வகையில் இல்லை.

இந்திய அணியின் சுழல் பந்துவீச்சால் தவிடுபொடி ஆகினர் பங்களாதேஷ் வீரர்கள். குறிப்பாக அக்சர் பட்டேல் (4 விக்கெட்ஸ்) மற்றும் குல்தீப் யாதவ் (3 விக்கெட்ஸ்) இருவரும் அசத்தினர்.

முதல் இன்னிங்ஸில் மைதானம் சற்று வேகமாக இருந்ததால் குல்தீப் யாதவ் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸின்போது மைதானம் சற்று ஸ்லோ ஆனது. இந்த தருணத்தில் அக்சர் பட்டேல் பந்துவீச்சு சிறப்பாக எடுபட்டது.

முக்கியமான கட்டத்தில் அக்சர் பட்டேல் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பியது. வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே அவர் வீழ்த்தியிருந்தாலும் முக்கியமான கட்டத்தில் அந்த விக்கெட்டுகள் வந்ததால் இந்திய அணிக்கு வெற்றியாகவும் மாறியது.

அக்சர்பட்டேல் பந்துவீச்சை புகழ்ந்ததோடு இந்திய அணிக்கு அவர் போன்ற பந்துவீச்சாளர் எவ்வளவு முக்கியம் என்று பேசியிருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.

“இந்தியா, பங்களாதேஷ், இலங்கை போன்ற மைதானங்கள் 3வது, 4வது மற்றும் 5வது நாட்களில் சற்று ஸ்லோ ஆகும். அந்த சூழலில் அக்சர் பட்டேல் போன்ற பவுலரின் சுழற்பந்து நன்றாக எடுபடும். ஏனெனில் சற்று வேகமாக வீசுவார். அஸ்வின், குல்தீப் போன்று காற்றில் தூக்கி வீசமாட்டார்.  அப்போது பேட்ஸ்மேன்கள் அடிக்க முயற்சித்து தவறுகள் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

அப்படி ஒரு நிலையில் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் மாட்டிக்கொண்டர்கள். அவர்கள் செய்த தவறை விக்கெட் ஆக மாற்றி இந்திய அணிக்கு வெற்றியையும் பெற்று தந்திருக்கிறார் அக்சர். அக்சரை தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும்.” என்றார் ஆகாஷ் சோப்ரா.

Mohamed:

This website uses cookies.