கேரளாவுக்கு எதிராக நேற்று நடந்த முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 போட்டியில் தமிழக அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 37 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி, கேரள மாநிலம் தும்பாவில் நேற்று நடந்த தனது முதல் லீக் போட்டியில் கேரளாவை சந்தித்தது.

முதலில் களமிறங்கிய தமிழக அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. முரளி விஜய், ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பாபா அபராஜித் 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து காயத்தால் வெளியேறினார். முகமது 11 பந்துகளில் 34 ரன்களும் கேப்டன் தினேஷ் கார்த்திக் 33 ரன்களும் எடுத்தனர். கேரள தரப்பில் பசில் தம்பி 3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய அணிக்கு தமிழகத்தில் இருந்து கிடைக்கப்போகும் தங்க மகன்! 1
In Vijay Hazare Trophy, Tamil Nadu beat Railways by eight wickets while in other match, Punjab registered a three-wicket win over Baroda in an Elite Group B match.

தொடர்ந்து ஆடிய கேரள அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் தமிழக அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக பந்து வீச்சாளர்கள் பெரியசாமி, டி.நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நடராஜன்-பெரியசாமி 3 விக்கெட்:

தமிழகத் தரப்பில் அபாரமாக பந்துவீசி டி நடராஜன் 3-25, பெரியசாமி 3-36 விக்கெட்டுகளை சாய்த்தனா். 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மிழகம் 4 புள்ளிகளைப் பெற்றது.இந்திய அணிக்கு தமிழகத்தில் இருந்து கிடைக்கப்போகும் தங்க மகன்! 2

ஏனைய ஆட்டங்களில் சௌராஷ்டிரா 9 விக்கெட் வித்தியாசத்தில் நாகாலாந்தையும், ஹைதராபாத் 2 ரன்கள் வித்தியாசத்தில் (விஜேடி முறை) பஞ்சாப்பையும், ராஜஸ்தான் 97 ரன்கள் வித்தியாசத்தில் மணிப்பூரையும், சண்டீகா் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஹிமாச்சலையும், கோவா 4 விக்கெட் வித்தியாசத்தில் பரோடாவையும், ஆந்திரம் 10 விக்கெட் வித்தியாசத்தில் பிகாரையும், மகாராஷ்டிரம் 8 விக்கெட் வித்தியாசத்தில் ரயில்வேயையும், விதா்பா 9 விக்கெட் வித்தியாசத்தில் திரிபுராவையும், சத்தீஸ்கா் 9 விக்கெட் வித்தியாசத்தில் அருணாசலப்பிரதேசத்தையும், மும்பை 10 விக்கெட்டில் மிஸோரத்தையும், கா்நாடகம் 9 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரகாண்டையும் வென்றன. • SHARE

  விவரம் காண

  மயங் அகர்வாலின் வீக்னெஸ் இதுதான்: போட்டுடைத்த சுனில் கவாஸ்கர்

  கொல்கத்தாவில் வரும் வெள்ளிக்கிழமை முதல் பகலிரவு போட்டியாக வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது, இதற்கான பயிற்சியில் இந்திய மற்றும் வங்கதேச...

  இவரை கண்டிப்பாக ஐபிஎல் தொடரில் எடுத்தாக வேண்டும்: வெளிநாட்டு வீரருக்காக வரிந்து கட்டும் யுவராஜ் சிங்க

  அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் புதுவிதமான காட்டடியில் 30 பந்துகளில் 91 ரன்கள் விளாசி சாதனை புரிந்துள்ளார். இதற்கு...

  வீடியோ: இரண்டு கையால் பந்து வீசி, விக்கெட்டும் எடுத்து அசத்திய இளம் வீரர்!

  தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி சூப்பர் லீக் டி20 கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் இரண்டு கைகளாலும் பந்து வீசி விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். தென்ஆப்பிரிக்காவில் மான்சி...

  இன்னும் 2 வருசத்துல என்ன நடக்குதுன்னு மட்டும் பாருங்க.. வங்கதேச கேப்டன் எச்சரிக்கை

  தலைசிறந்த அணிகளுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என வங்காளதேச அணி கேப்டன் தெரிவித்துள்ளார். கடைசி ஏழு மாதங்களில் இரண்டு...

  வங்கதேச டெஸ்ட் தொடரை தொடர்ந்து… சக வீரரை அறைந்த பந்துவீச்சாளர் சஸ்பென்ட்! கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை!

  சக வீரரை அடித்த வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்தது. தேசிய கிரிக்கெட் லீக் போட்டி வங்காளதேசத்தில் நடந்து...