இனி பால் டேம்பரிங் செய்தால் 12 ஒருநாள் போட்டிகளில் ஆடத் தடை!!
சமீப காலமாக பால் டேம்பரிங் எனப்படும் பந்தின் நிலவ்யை செயற்கையாக மாற்றும் செயல் அதிகரித்து வருவதுடன், போட்டிகளில் வெற்றி வெற்றி பெறுவதற்காக வீரர்கள் அதனை எளிதில் செய்து வருகின்றனர்.
இதனால் ஆட்டத்தின் நிலை ஒரு ஓவரில் அப்படியே மாறி விடுகிறது. மேலும், ஆட்டத்தின் மீதான நம்பிக்கை ரசிகர்களுக்கு இல்லாமல் போய் விடுகிறது.
சமீபத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள் மூன்று பேர் இந்த பிரச்சனையில் சிக்கி ஒரு வருட தடையில் உள்ளனர். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித்திற்கு தெரிந்தோ தெரியாமலோ, துணை கேப்டன் டேவிட் வார்னர் கூறியதன் பேரில் பேஸ்ட்மேன் கேம்ரான் பேங்கிராப்ட், பால் டேம்பரிங் செய்தார்.

அதிலும் அதற்கென ஒரு பிரத்யோக மணல் காகிதம் வைத்து பணத்தின் ஒரு பகுதியது அடிக்கடி ஓவர்களுக்கு இடையில் சுரண்டி உள்ளார். இது கேமராவில் தெள்ளத்தெளிவாக பட, ஆஸ்திரேலியா அணி கையும் களவுமாக பிடிபட்டது. இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தால் மூவரும் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டனர்.
தற்போது, இந்த பிரச்னை ஓய்ந்து முடிவதற்குள், சிறிதும் பயம் இன்றி இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் வாயில் போடும் சுவிங்கத்தை வைத்து ஓயல டேம்பரிங் செய்துள்ளார். இதனால் அடுத்த போட்டியில் விளையாட தடை செய்யப்பட்டார் சண்டிமால்.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், இதற்கான தண்டனையை அதிகரித்துள்ளது ஐசிசி.
இனி பால் டேம்பரிங் செய்தால் அது லெவல்.3 குற்றமாக கருதப்படும். இதனால் 6 டெஸ்ட் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைசெய்யப்படுவர்.