முத்தரப்புத் தொடருக்கான 13 பேர் கொண்ட அணி அறிவிப்பு: ஆல் ரவுண்டருக்கு இடமில்லை! 1

வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடருக்கான அணியில் இருந்து மெஹிதி ஹசன் நீக்கப்பட்டுள்ளார்.

வங்காள தேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது.

இதற்கான 13 பேர் கொண்ட வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மெஹிதி ஹசன் நீக்கப்பட்டுள்ளார். மஹேதி ஹசன், ஆபிஃப் ஹொசைன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.முத்தரப்புத் தொடருக்கான 13 பேர் கொண்ட அணி அறிவிப்பு: ஆல் ரவுண்டருக்கு இடமில்லை! 2

13 பேர் கொண்ட வங்காளதேச அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:

1. ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), 2. லிட்டேன் தாஸ், 3. சவுமியா சர்கார், 4. முஷ்பிகுர் ரஹிம், 5. மெஹ்முதுல்லா, 6. யாசின் அராபத, 7. ஆபிஃப் ஹொசைன், 8. மெகசாடெக் ஹொசைன், 9. சபீர் ரஹ்மான், 9.தைஜூல் இஸ்லாம், 11. மஹெதி ஹசன், 12. முகமது சாய்புதின், 13. முஷ்டாபிஜூர் ரஹ்மான்.

இந்நிலையில்,

வங்கதேச சட்டோகிராமில் நடைபெற்ற ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை அந்த சொந்த மண்ணில் 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்திய மிகச்சிறப்பான வெற்றியில் ஆப்கான் வெற்றிக்கு மைதான ஊழியர்களின் உழைப்பும் பெரும் பங்களித்தது.

முத்தரப்புத் தொடருக்கான 13 பேர் கொண்ட அணி அறிவிப்பு: ஆல் ரவுண்டருக்கு இடமில்லை! 3
Shakib also denied criticising Mahmudullah’s attitude at the World Cup after details of the latter’s laboured innings against Afghanistan was leaked by one of his teammates.

5ம் நாளான இன்று வங்கதேச அணியை மழைதான் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் மழை ஏறக்குறைய வங்கதேசத்தைக் காப்பாற்றியிருக்கும். ஆனால் மைதான ஊழியர்களின் மைதானத்தின் மழை நீரை வடியச் செய்த அயராத பணியும் பெரும் பங்காற்றியது.மைதானத்தின் அபாரமான மழைநீர் வடிகால் வசதிகளும் உதவியது.

சஹுர் அகமெட் சவுத்ரி ஸ்டேடியத்தின் ஊழியர்கள் ஓய்வு ஒழிச்சலின்றி எப்படியாவது இந்த ஆட்டத்தில் முடிவு ஏற்பட வேண்டும் என்று பாடுபட்டு மழை நீர், ஈரம் ஆகியவற்றை அகற்றுவதில் பாடுபட்டனர்.

முதல் 3 மணி நேரம் முற்றிலும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பிறகு 1 மணியளவில் நடுவர்கள் வீரர்களை களத்துக்கு அழைக்க ஆட்டம் தொடங்கியது, ஆனால் 7 நிமிடங்களில் மழை மீண்டும் கொட்டத் தொடங்கியது. இந்த மழை நிற்க 2 மணி நேரம் ஆனது.முத்தரப்புத் தொடருக்கான 13 பேர் கொண்ட அணி அறிவிப்பு: ஆல் ரவுண்டருக்கு இடமில்லை! 4

அதன் பிறகு மைதான ஊழியர்கள் கடுமையாக பாடுபட்டு விளையாடும் அளவுக்கு மைதானத்தை தேற்ற 4.20 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. ஆனாலும் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.

18.4 ஓவர்கள்தான் நடக்கும் என நடுவர்கள் தெரிவிக்க ஆட்டம் தொடங்கியது ரஷீத் 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 3.2 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வங்கதேசம் சுருண்டது. மறக்க முடியாத இந்த ஆப்கன் வெற்றியில் மைதான ஊழியர்களின் பங்கையும் மறக்க முடியாது என்கின்றன வங்கதேச ஊடகங்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *