பிங்க் பந்து டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்ய தேர்வு! 1

பிங்க் பந்து டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்ய தேர்வு!

அணிகள்:

இந்தியா (விளையாடும் லெவன்): மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா, விராட் கோஹ்லி (இ), அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருதிமான் சஹா (வ), உமேஷ் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா

பங்களாதேஷ் (விளையாடும் லெவன்): ஷாட்மான் இஸ்லாம், இம்ருல் கயஸ், மோமினுல் ஹக் (இ), முகமது மிதுன், முஷ்பிகூர் ரஹீம், மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ் (வ), நயீம் ஹசன், அபு ஜெயத், அல்-அமீன் ஹொசைன், எபாதத் ஹொசைன்

 

 

 

 

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா – வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இது பகல்-இரவாக நடத்தப்படும் போட்டி என்பது கூடுதல் விசேஷமாகும். இதனால் இந்த டெஸ்ட் இப்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.பிங்க் பந்து டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்ய தேர்வு! 2

டெஸ்ட் அரங்கில் ‘நம்பர் ஒன்’ அணியாக வலம் வரும் இந்தியா முதல்முறையாக பகல்-இரவு டெஸ்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆரம்பத்தில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட தயக்கம் காட்டிய இந்திய அணி, சவுரவ் கங்குலி கிரிக்கெட் வாரிய தலைவர் ஆனதும், சம்மதம் தெரிவித்து விட்டது.

பகல்-இரவு டெஸ்டுக்கு மினுமினுப்பான இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பால்) பயன்படுத்தப்படுகிறது. இது தான் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கக்கூடியதாகும். பிங்க் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களின் ஜாலம் கொடிகட்டி பறக்கும். மாலைவேளையில் பந்து கண்ணுக்கு தெளிவாக தெரிவதில் சிக்கல் உள்ளது.பிங்க் பந்து டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்ய தேர்வு! 3

அதாவது சூரிய வெளிச்சம் மறைந்து, மின்னொளி எரியவிடப்படும் சமயத்தில் அதற்கு ஏற்ப பேட்ஸ்மேன்கள் தங்களை துரிதமாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் தான் முந்தைய பகல்-இரவு டெஸ்டுகளில் அதிகமான விக்கெட்டுகள் சரிந்துள்ளன. இந்த தடைகளை பேட்ஸ்மேன்கள் எப்படி உடைக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்திய அணியில் புஜாரா, ஜடேஜா, மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் 2016-ம் ஆண்டு துலீப் கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட்டில் பிங்க் பந்தில் விளையாடி உள்ளனர். அந்த அனுபவங்களை சக வீரர்களிடம் பகிர்ந்துள்ளது உதவிகரமாக இருக்கும். சாதனையின் விளிம்பில் உள்ள விராட் கோலி 32 ரன்கள் எடுத்தால், கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெறுவார்.வ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *