இந்திய அணியின் அழைப்பை மறுத்தது வங்கதேச அணி

இந்த வருட முடிவில் முத்தரப்பு தொடரில் விளையாட நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகளை அழைத்தது இந்திய அணி. ஆனால், ஏகப்பட்ட போட்டிகள் இருப்பதால் இந்தியாவிற்கு வந்து முத்தரப்பு போட்டிகளில் விளையாட முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் கூறியுள்ளார். இந்த அக்டோபர் மாதத்தில் முத்தரப்பு தொடரில் விளையாட வங்கதேசத்தை அழைத்தது இந்திய அணி.

நீண்ட தொடரில் விளையாட செப்டம்பர் மாதத்தில் தென்னாப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்கிறது வங்கதேசம். தென்னாப்ரிக்காவிற்கு சென்று 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள், மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் வங்கதேச அணி விளையாடவுள்ளது. செப்டம்பர் 28இல் முதல் டெஸ்ட் தொடங்கி அக்டோபர் 29இல் இரண்டாவது டி20 போட்டி முடிந்து ஊருக்கு திரும்பவுள்ளது வங்கதேசம். இந்த தென்னாபிரிக்கா தொடர் முடிந்தவுடன் நவம்பர் 4ஆம் தேதி பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர்கிறது.

இந்த அக்டோபர் மாதத்தில் முத்தரப்பு தொடரில் விளையாட வங்கதேசத்தை அழைத்தது இந்திய அணி. இந்நிலையில், இந்த தொடர் விளையாட போதிய நேரம் இல்லாததால்,இந்த தொடரில் கலந்து கொள்ள முடியாது என வங்கதேச கிரிக்கெட் தலைவர் தெரிவித்துள்ளார்.

“இந்திய அணி எங்களை அழைத்தது. ஆனால் எங்களால் விளையாட முடியாது. அக்டோபர் 30ஆம் தேதி தான் தென்னாபிரிக்காவில் இருந்து கிளம்பவுள்ளோம். ஆனால், அவர்கள் 28ஆம் தேதிக்குள் விளையாடலாம் என்று கூறுகிறார்கள். அது முடிந்த பின் BPL தொடர்கிறது. இதனால், எங்களால் மாற்றமுடியாது. அப்படி மாற்றினால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பாதிப்பு வரும். இதனால், எங்களால் முத்தரப்பு தொடரில் பங்கேற்க முடியாது,” என ஹசன் கூறினார்.

மேலும், பல அணிகள் எங்களை அழைக்கிறது. ஆனால், நாங்க இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் வங்கதேச அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதனால், அனைத்து பெரிய அணிகளுடன் விளையாட உள்ளது. சில நாட்களுக்கு முன்பு முதன் முறையாக சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது வங்கதேசம்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.