இங்கிலாந்தில் விளையாடும் நாட்வெஸ்ட் டி20 ப்ளாஸ்ட் தொடரில் எசக்ஸ் அணிக்காக வங்கதேச நட்சத்திர வீரர் தமீம் இக்பால் விளையாட உள்ளார். இரண்டாவது வெளிநாட்டு வீரராக பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீருடன் இந்த தொடரில் விளையாடவுள்ளார். ஜூலை 9 அன்று கென்ட் அணிக்கு எதிராக இரண்டு வீரர்களும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச வீரர் தமீம் இக்பால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாம்பியன்ஸ் டிராபியின் முதல் பயிற்சி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 102 ரன் அடித்து அசத்தினார். அதன் பிறகு, முதல் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் 128 ரன் அடித்தார்.
அடுத்த போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 95 ரன் அடித்து 5 ரன்னில் சதத்தை தவற விட்டார். அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 70 ரன் அடித்தார். இவர் சிறப்பாக விளையாடியும், அரையிறுதியில் தோற்று ஊருக்கு கிளம்பியது வங்கதேசம். 293 அடித்து அந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அதிக ரன் அடித்தவர் பட்டியலில் 3வது இடத்தில் இருந்தார். மொத்தமாக, இங்கிலாந்தில் டெஸ்டில் சராசரி 64-வும், ஒருநாள் போட்டிகளில் சராசரி 50.71-வும் வைத்து கொண்டிருக்கிறார்.
“அவர் எப்படியா பட்ட சிறப்பான வீரர் என சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் நிரூபித்தார்,” என எசக்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான கிறிஸ் சில்வர்வூட் கூறினார்.
இங்கிலாந்தின் நடக்கும் நாட்வெஸ்ட் டி20 தொடரில் விளையாட தமீம் இக்பால் காத்துக்கொண்டிருக்கிறார்.
“என் அணியினருடன் நாட்வெஸ்ட் டி20 ப்ளாஸ்ட் தொடரில் விளையாட காத்து கொண்டிருக்கிறேன்,” என தமீம் இக்பால் கூறினார்.