ஐபிஎல் ஏலம்: வீரர்களின் அடிப்படை விலை அறிவிப்பு,கிரிஸ் லின் மற்றும் உத்தாப்பாவின் விலை என்ன தெரியுமா? 1

ஐபிஎல் 2020 சீசன் வீரா்கள் ஏலம் வரும் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள நிலையில் வீரா்களின் அடிப்படை விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 971 வீரா்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ள நிலையில், அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆஸ்திரேலிய வீரா்கள் கிளென் மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸல்வுட், மிச்செல் மாா்ஷ், தென்னாப்பிரிக்க வீரா் டேல் ஸ்டெயின், இலங்கை பேட்ஸ்மேன் ஏஞ்சலோ மேத்யூஸ்,கிறிஸ் லீன் ஆகியோருக்கு ரூ.2 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் ஏலம்: வீரர்களின் அடிப்படை விலை அறிவிப்பு,கிரிஸ் லின் மற்றும் உத்தாப்பாவின் விலை என்ன தெரியுமா? 2

ரூ.1.5 கோடி அடிப்படை விலை:

இத்தொகை வரம்பில் இந்தியாவின் ராபின் உத்தப்பா, மட்டுமே இடம் பெற்றுள்ளாா். ஆஸி. ஷான் மாா்ஷ், கேன் ரிச்சா்ட்ஸன், இங்கிலாந்து இயான் மொா்கன், ஜேஸன் ராய், கிறிஸ்வோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் மோரீஸ், கைல் அபாட் இடம் பெற்றுள்ளனா்.

இந்த ஏலத்தில் அதிக தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ள இந்திய வீரா் ராபின் உத்தப்பா ஆவாா்.

எனினும் ஆஸி. அதிரடி வேகப்பந்து வீச்சாளா் மிச்செல் ஸ்டாா்க் இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை.

ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் 215 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள். 754 பேர் உள்ளூர் போட்டியில் விளையாடியவர்கள்.ஐபிஎல் ஏலம்: வீரர்களின் அடிப்படை விலை அறிவிப்பு,கிரிஸ் லின் மற்றும் உத்தாப்பாவின் விலை என்ன தெரியுமா? 3

வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 55 பேர் ஏலப்பட்டியலில் உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்கா (54 வீரர்கள்), இலங்கை (39), வெஸ்ட் இண்டீஸ் (34), நியூசிலாந்து (24), இங்கிலாந்து (22), ஆப்கானிஸ்தான் (19), வங்காளதேசம் (6) ஆகிய நாடுகள் உள்ளன.

அமெரிக்காவில் இருந்து ஒரு வீரரும் இதில் இடம் பெற்றுள்ளார்.

உலகின் சிறந்த வேகப்பந்து வீரரும், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவருமான ஸ்டார்க் ஐ.பி.எல். போட்டியில் விளையாடவில்லை. அவர் ஏலத்தில் இருந்து விலகினார். கடந்த முறையும் அவர் ஆடவில்லை.

ஸ்டார்க்

2018-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.4 கோடிக்கு எடுத்தது. ஆனால் காயம் காரணமாக அவர் போட்டி முழுவதும் ஆடவில்லை.

சர்வதேச போட்டியில் இருந்து சில மாதங்கள் ஒதுங்கி இருந்த மேக்ஸ்வெல் ஐ.பி.எல். ஏல பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவருக்கான அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.

கிறிஸ் லின், கம்மின்ஸ், ஹாசில்வுட், மிச்சேல் மார்ஷ் (ஆஸ்திரேலியா), ஏஞ்சலோ மேத்யூஸ் (இலங்கை), ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோருக்கும் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.1 கோடிக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள வீரர்கள் வருமாறு:-

ராபின் உத்தப்பா, ஷான் மார்ஷ், கானே ரிச்சட்சன், மார்கன், ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் மோரிஸ், அபோட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *