விராட் கோலியின் அணியை விட இந்த அணிதான் சிறந்தது: கடுப்பேற்றும் வகையில் பேசும் ரவி சாஸ்திரி 1

ஒயிட்பால் கிரிக்கெட்டில் தற்போதுள்ள விராட் கோலி தலைமையிலான அணியைக்கூட 1985-ல் விளையாடிய அணியால் வீழ்த்த முடியும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ரவி சாஸ்திரி. இவர் 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தவர். அதேபோல் 1985-ல் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி உலக சாம்பியன்ஸ்ஷிப் கோப்பையை வென்றது. இந்த அணியிலும் ரவி சாஸ்திரி இடம்பிடித்திருந்தார்.

விராட் கோலியின் அணியை விட இந்த அணிதான் சிறந்தது: கடுப்பேற்றும் வகையில் பேசும் ரவி சாஸ்திரி 2
India’s team poses for a photograph in front of the Members Pavilion before the start of the fifth day’s play of the fourth and final cricket Test between India and Australia at the Sydney Cricket Ground on January 7, 2019. – Light rain prevented play from starting on time at the Sydney Cricket Ground

உலக கோப்பையை வென்ற 1983-ல் இருந்த அணியைவிட 1985-ல் இருந்த அணிதான் ஒயிட்பால் கிரிக்கெட் சிறந்தது. அந்த அணியால் தற்போதுள்ள விராட் கோலி தலைமையிலான அணிக்கும் நெருக்கடி கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘1985-ல் உள்ள அணியால் எந்த அணிக்கும் நெருக்கடி கொடுக்க முடியும். இதில் எந்த சந்தேகமுல் இல்லை.

1985-ல் இருந்து அணி 1983-ல் உலக கோப்பையை வென்ற அணியைவிட சிறந்தது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இரண்டு அணிகளிலும் நான் விளையாடியிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். 1983 உலக கோப்பையிலும், 1985 உலக சாம்பியன்ஷிப் அணியிலும் விளையாடியுள்ளேன்.விராட் கோலியின் அணியை விட இந்த அணிதான் சிறந்தது: கடுப்பேற்றும் வகையில் பேசும் ரவி சாஸ்திரி 3

1983-ல் இருந்த 80 சதவீத வீரர்கள் 1985-ல் விளையாடிய அணியில் இருந்தனர். ஆனால், சிவராமகிருஷ்ணன், விஷ்வநாத், அசாருதீன் போன்ற இளைஞர்கள் அணியில் இணைந்தனர். ஏற்கனவே அனுபவ வீரர்கள் இருந்ததால் சிறந்த அணியாக திகழ்ந்தது’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *