எங்கள் தோல்விக்கு இவர்தான் காரணம்: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கடுப்பு! 1

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி  59 ரன்கள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். துவக்க வீர்ர் ஷிகார் தவான் 2 ரன்னிலும், ரோகித் சர்மா 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், 20 ரன்னில் ஆவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இருப்பினும் கேப்டன் விராட் கோலி அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி, 112 பந்துகளில் தனது 42வது சதத்தை எட்டினார். எங்கள் தோல்விக்கு இவர்தான் காரணம்: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கடுப்பு! 2மறுமுனையில் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர், அரை சதம் அடித்தார். இதனையடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது.

280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் கிறிஸ் கெய்ல் 11 ரன்னிலும், ஹோப் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 12 ஓவரின் போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஓவர்கள் குறைக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 46 ஓவர்களில் 270 ரன்கள் எடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. எங்கள் தோல்விக்கு இவர்தான் காரணம்: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கடுப்பு! 3 இவின் லீவிஸ் 65 ரன்களும், நிகோலஸ் பூரன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்ததையடுத்து, இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 42 ஓவர்களில் 210 ரன்களுக்கு, அனைத்து விக்கெட்களை இழந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியுற்றது.  இப்போட்டியில் 120 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த போட்டியை அடுத்து, கேப்டன் விராட் கோலி , மூன்று சாதனைகளை புரிந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவித் மியான்தத், 64 இன்னிங்சில் ஆயிரத்து930 ரன்கள் அடித்திருந்த சாதனையை  விராட் கோலி முறியடித்தார். 26 வருடத்திற்குப் பிறகு மியான்தத் சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி, 34 இன்னிங்சில் இச்சாதனையை படைத்தார். தொடர்ந்து அவர், வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக 2,000 ரன்களை கடந்து, ரோகித் சர்மாவின் சாதனையையும் முறியடித்தார். ஆஸ்திரேலியா அணிக்கு  எதிராக 37 போட்டிகளில் 2,000 ரன்களை கடந்து, ரோகித் சர்மா சாதனையை பின்னுக்கு தள்ளினார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 6 சதங்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையும் படைத்தார். எங்கள் தோல்விக்கு இவர்தான் காரணம்: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கடுப்பு! 4

இந்த தோல்வி குறித்து பேசிய ஜாசன் ஹோல்டர் கூறியதாவது…

இந்தியாவின் பேட்டிங் முடியும் வரை ஆட்டம் எங்கள் கையில் இருந்தது எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர் நாள் கடைசியில் சே விக்கெட்டுகளை விட்டுவிட்டோம் இதான் தோல்விக்கு காரணம் குறிப்பாக ஒவ்வொரு முறையும் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்படுகின்றனர் ஆனால் பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு தோல்வியை தந்துவிடுகிறார்கள் இந்த தோல்விக்கு எங்கள் பேட்ஸ்மேன்களை காரணம் என்று கூறினார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *