டெஸ்ட் போட்டிகள் என்றாலே நாட்கண்ககில் ஆடகளத்தில் நின்று மெதுவாக பந்தினை உருட்டி ஆடுவது என்ற காலம் போய் தற்போது நின்று விட்டால் சிக்சர்கள் பறக்க விடும் காலம் வந்துவிட்டது. தற்போதயை பேட்ஸ்மேன்கள் பொதுவாக அதிரடியா ஆடுவதயே விரும்புகின்றனர். எப்போதும் போல் சிறு நேடம் கட்டை வைத்து துவங்கும் அவர்கள் போகப் போக அதிரடி காட்டத் துவங்குகின்றனர். பல சிக்சர்களையும் பறக்க விடுவார்கள் இந்த ஆட்டத்தில்.
பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் 50 ஸ்ட்ரைக் வைத்து ஆடும் வீரர்களுக்கு மத்தியில் சேவாக் போன்ற வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் கூட 100+ ஸ்ட்ரைக் ரேட் ஆடி, சிக்சர் அடித்து சதம் அடிக்கும் வீரராக உள்ளார்.
தற்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்துள்ள முதல் 10 வீரர்களைப் பார்ப்போம். இதில் இந்திய ஜாம்பவான் தோனி 90 போட்டிகளில் 78 சிக்சர்களுடன் 13 ஆவது இடத்திலும், கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகளில் 69 சிக்சர்களுடன் 17ஆவது இடத்திலும் உள்ளார்.
10.மேத்யூ ஹைடன் – 82 சிக்ஸர்
1994 முதல் 2009 வரை மொத்தம் 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் மேத்யூ ஹைடன் அதில் மொத்தம்82 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 380 ரன்கள் குவித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன்.