ஸ்மித் மற்றும் வார்னருக்கு பிக் பாஷ் லீக்கிலும் தடை!! 1

ஓராண்டு தடைபெற்றுள்ள வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் பிக் பாஷ் லீக்கில் விளையாட இயலாது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

வார்னர், ஸ்மித் பங்கேற்க இயலாது- பிக் பாஷ் லீக் தலைவர் சொல்கிறார்
ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய வழக்கில் ஓராண்டு தடைபெற்றுள்ளனர். இதனால் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டது.ஸ்மித் மற்றும் வார்னருக்கு பிக் பாஷ் லீக்கிலும் தடை!! 2

தற்போது ஆஸ்திரேலியாவின் கீழ்மட்ட போட்டிகளிலும், வெளிநாட்டு லீக் தொடர்களிலும் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடைக்குப்பின் முதன் முறையாக இருவரும் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக் தொடரில் பங்கேற்றார்கள்.

ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் பலர் இருவரையும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் பிக் பாஷ் டி20 லீக் தொடரின் தலைவர் கிம் மெக்கோனி ‘‘ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தடை ஆஸ்திரேலியா தேசிய அணிக்கும், கிளப் லெவல் ஆன தொடருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் வரும டிசம்பர் மாதம் தொடங்கும் 2018-19 சீசனில் விளையாட வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.ஸ்மித் மற்றும் வார்னருக்கு பிக் பாஷ் லீக்கிலும் தடை!! 3

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கனடா டி20 போட்டியில் பங்கேற்று அதிரடியாக அரைசதம் அடித்தார்.

கனடா குளோபல் டி20 போட்டியில் டொரான்டோ நேஷனல் அணிக்காக விளையாடிய ஸ்மித் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தான் மீண்டும் அதே ஃபார்மில் இருப்பதை வெளிப்படுத்தினார்.

தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்த ஆஸ்திரேலிய அணி கேப்டவுனில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்கள். இதில் ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடையும், பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் ஆஸ்திரேலிய வாரியம் விதித்தது. உள்நாட்டில் கீழ்நிலையில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.ஸ்மித் மற்றும் வார்னருக்கு பிக் பாஷ் லீக்கிலும் தடை!! 4

இந்நிலையில், இந்த விவகாரத்துக்குப் பின் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் 2 மாதங்களாக ஒதுங்கி இருந்த ஸ்மித், வார்னர், கனடாவில் நடந்துவரும் குளோபல் டி20 போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

கனடாவில் குளோபல் டி20 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் டொரான்டோ நேஷனல்ஸ் அணிக்கு கேப்டன்டேரன் சாமி, வின்னிபெக் அணிக்கு டிவைன் பிராவோ கேப்டனாகவும், மான்ட்ரியல் அணிக்கு இலங்கை வீரர் மலிங்கா கேப்டனாகவும், எட்மான்டன் அணிக்கு ஷாகித் அப்ரிடி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று கிங்க் சிட்டி நகரில் நடந்த போட்டியில் டொரான்டோ நேஷனல்ஸ் அணியும், வான்கூவர் நைட்ஸ் அணியும் மோதின.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *