போலிச்சான்றிதல் கொடுத்த இளம் வீரர்: மும்பை இந்தியன்சுக்கு பெரும் அவமானம்! 2 ஆண்டுகள் தடை! 1

வயது சான்றிதழில் முறைகேடு செய்ததாக மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

போலிச்சான்றிதல் கொடுத்த இளம் வீரர்: மும்பை இந்தியன்சுக்கு பெரும் அவமானம்! 2 ஆண்டுகள் தடை! 2
Kolkata: Mumbai Indians Team Huddle during an IPL match between Kolkata Knight Riders and Mumbai Indians at the Eden Gardens in Kolkata, on April 13, 2016. (Photo: IANS)

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 17 வயதான இளம் வீரர் ரஷீக் சலாம். ஃபாஸ்ட் பவுலரான இவரை கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ராசிக் சலாம் இடம்பிடித்திருந்தார். 17 வயதேயான அவர், ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். பெரிய அளவில் விக்கெட்டுக்கள் வீழ்த்தாவிடிலும், அவரது பந்து வீச்சு மெச்சும் அளவிற்கு இருந்தது.போலிச்சான்றிதல் கொடுத்த இளம் வீரர்: மும்பை இந்தியன்சுக்கு பெரும் அவமானம்! 2 ஆண்டுகள் தடை! 3

இதனால் கிரிக்கெட் விமர்சகர்கள் சலாமுக்கு சிறந்த வருங்காலம் உள்ளது என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வயது தொடர்பான சான்றிதழில் முறைகேடு செய்ததாக பிசிசிஐ அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இங்கிலாந்து தொடருக்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். தற்போது சலாமுக்குப் பதில் பிரபாத் மயுரா சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, ஜாம்மு-காஷ்மீர் மாநில கல்வித்துறை ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதில் ‘‘கிரிக்கெட் சங்கத்திற்கும் வழங்கிய வயது தொடர்பான தகவலும், 10-ம் வகுப்பு படிக்கும்போது அவரது சான்றிதழில் இருந்த பிறந்த நாள் தேதியும் ஒத்துப்போகவில்லை’’ என்று தெரிவித்திருந்தது. இதனால் பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

போலிச்சான்றிதல் கொடுத்த இளம் வீரர்: மும்பை இந்தியன்சுக்கு பெரும் அவமானம்! 2 ஆண்டுகள் தடை! 4

 

அண்டர் 19 அணியில் இடம்பெற்றிருந்த அவர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் நடக்க உள்ள முத்தரப்பு அண்டர் 19 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அவர், அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நல்ல பவுலராக ஜொலிக்கும் தகுதியிருந்த ரஷீக் சலாம், இப்படியொரு சிக்கலில் மாட்டி தடைபெற்றுள்ளார். இது அவரது எதிர்காலத்திற்கு தடையாக அமைந்துள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *