இந்திய அணிக்கு புதிய தேர்வுக்குழு! பிசிசிஐ அறிவித்த புதிய அறிவிப்பு! அடுத்த தலைவர் யாற்? 1

இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் பணிக்கு  கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆடவர் சீனியர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் அணிகளுக்கான தேர்வாளர்கள் பணியிடத்தில் தலா 2 இடங்கள் காலியாக இருப்பதாகவும், மகளிர் கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் பணியிடத்தில் 5 இடங்கள் காலியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

image

ஆடவர் சீனியர் அணி தேர்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்போர் 7 டெஸ்ட் போட்டிகளிலோ அல்லது 30 முதல் தர போட்டிகளிலோ அல்லது 10 ஒருநாள்  மற்றும் 20 முதல் தர போட்டிகளிலோ விளையாடியிருக்க வேண்டும் எனவும், ஜூனியர் அணி தேர்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்போர், 25 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2019-20 சீசனுக்கான இந்திய வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில், கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால், தல தோனியின் கிரிக்கெட் சகாப்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது.

இந்த பட்டியல், 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரை உள்ளடக்கியது. இதில், இளம் வீரர்களான தீபக் சஹார், மாயங்க் அகர்வால், ஸ்ரேயஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.இந்திய அணிக்கு புதிய தேர்வுக்குழு! பிசிசிஐ அறிவித்த புதிய அறிவிப்பு! அடுத்த தலைவர் யாற்? 2

மேலும், இந்த பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில், உயர்தர A+ பிரிவில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரோ ஆகிய மூன்று வீரர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

அதே போல, முதல் தர வீரர்கள் என்கிற A பிரிவில் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், சேத்தேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட் ஆகிய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பிசிசிஐயின் வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இல்லாதது தோனியின் ரசிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியை கேப்டனாக இருந்து மிகவும் திறமையாக வழிநடத்தி உலகக் கோப்பையை வென்று தந்த ஒரு ஜாம்பாவனை ஓய்வு பெறும் நேரத்தில் பிசிசிஐ இப்படி அவமதிக்கும் விதமாக வழியனுப்பி வைப்பதா என்று ரசிகர்கள் பிசிசிஐ நோக்கி சமூக ஊடகங்களில் கோபமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *