பிசிசிஐ இந்திய அணியின் இயக்குனர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

இந்திய அணியின் இயக்குனர் பதவிக்கு தற்போது பிசிசிஐ விண்ணப்பங்களை வரவேற்கிறது, இந்திய அணியின் இயக்குனர் பதவிக்கு விளம்பரம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு எல்லாம் இந்திய அணி ஒரு ஒரு சுற்று பயணம் செல்லும் பொது எல்லாம் அனைத்தையும் இந்திய அணியின் இயக்குனர் தான் பார்த்து கொள்ளுவர் ஆனால் தற்போது இந்திய அணியின் CAC குழு இந்த பொறுப்புகளை பார்த்து கொள்வதால் இயக்குனருக்கு வேலை குறைந்து விட்டது.

தற்போது இந்திய அணியின் இயக்குனர் பொறுப்பில் கபில் மல்ஹோத்ரா உள்ளார் இவருக்கு பணி காளம் முடிவு அடைய இன்னும் ஒரு தொடர் மீதி உள்ளது ஆனால் இவருக்கு பணி முடிவதற்குள் தற்போதே பிசிசிஐ இந்திய அணியின் இயக்குனர் பொறுப்பிற்கு விளம்பரம் செய்து உள்ளது தகுதி உள்ளவர்கள் இந்திய அணியின் இயக்குனர் பொறுப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய அணியின் இயக்குனர் பொறுப்பிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தான் வர வேண்டும் என்று CAC குழு கூறுகிறது. வெளியீட்டின் படி, பதவிக்கு விண்ணப்பிக்க, வேட்பாளர் முதல் வகுப்பு அளவில் அல்லது அதற்கு மேல் ஒரு குழுவை நிர்வகிக்க வேண்டும். அதோடு, பொது / தனியார் துறைகளில் 10 ஆண்டு பணி அனுபவம் தேவை என்றும், பிசிசிஐ கூறியுள்ளது.

இயக்குனர் பதவியின் தகுதிகள் :

1. பி.சி.சி.ஐ அல்லது தேசிய அணிகள் இணைந்த எந்த ஒரு கிரிக்கெட் அணியையும், முதல் வகுப்பில் அல்லது சர்வதேச மட்டத்தில் பனி புரிந்து இருக்க வேண்டும்.

2. பொது / தனியார் துறைகளில் பத்தாண்டு குறைந்தது கால அனுபவம் இருக்க வேண்டும் , இந்த தகுதியுடன் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சிறிது நாட்களுக்கு முன்பு தான் மிக பெரிய போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர்களை CAC குழு மற்றும் பிசிசிஐ தேர்ந்து எடுத்து.

இதை தொடர்ந்து தற்போது பிசிசிஐ இந்திய அணியின் புதிய இயக்குனரை தேர்ந்து எடுக்க உள்ளது.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.