பிசிசிஐ-க்கு வந்த பெரும் தலைவலி; ஐபிஎல் தொடருக்கு வந்த புதிய சிக்கல்? புலம்பும் கங்குலி!
டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த விவோ நிறுவனம் விலகியதால் பிசிசிஐக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் புலம்பியிருக்கிறார் அதன் தலைவர் சவுரவ் கங்குலி.
இந்தியா மற்றும் சீனா இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சனை காரணமாக இந்தியாவில் சீன தயாரிப்புகள் பலவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 100க்கும் மேலான சீன செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
இதற்கு ஆதரவு தெரிவித்து இந்தியர்கள் பலர் மீதமிருக்கும் சீன தயாரிப்புகளையும் இந்தியாவில் புறக்கணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இருந்துவந்த விவோ நிறுவனம் சீனாவை தலைமையிடமாகக் கொண்டிருக்கிறது. இதனால் அதையும் புறக்கணிக்க கோரி பிசிசிஐ தரப்பிற்கும் ஐபிஎல் நிர்வாகத்திற்கும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் நடுவே திடீரென விவோ நிறுவனம் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. இந்த திடீர் விலகலால் பிசிசிஐக்கு சுமார் 400 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடர் நடத்துவதில் ஏதேனும் சிக்கல் இருக்கின்றதா? என கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதுகுறித்து சமீபத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார் அதன் தலைவர் சௌரவ் கங்குலி. அவர் அளித்த பேட்டியில்,