பிசிசிஐக்கு ரூ.22 ஆயிரம் கோடி வரிவிலக்கா?: அரசு அமைப்பாக்கி, ஆர்.டி.ஐ. சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும்: சட்ட ஆணையம் பாய்ச்சல் 1

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பையும்(பிசிசிஐ), அதன் மாநில கிரிக்கெட் அமைப்புகளையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும், இந்தியாவின் பெயரைப் பயன்படுத்தி உலக அளவில் விளையாடும் அந்த அமைப்பு 10 ஆண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி வரிவிலக்கு பெற்றுள்ளது என்று சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பை தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை ஆய்வு செய்ய மத்திய சட்ட ஆணையத்துக்கு அறிவுறுத்தி இருந்தது.பிசிசிஐக்கு ரூ.22 ஆயிரம் கோடி வரிவிலக்கா?: அரசு அமைப்பாக்கி, ஆர்.டி.ஐ. சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும்: சட்ட ஆணையம் பாய்ச்சல் 2

இதையடுத்து, இது குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஆய்வு செய்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் இன்று தனது 128 பக்க பரிந்துரைகளை அளித்துள்ளது. அந்த பரிந்துரையில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஏகபோக அமைப்பு

90 ஆண்டுகள் பழமையான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு அரசு சாரா சங்கமாக செயல்பட்டு வருகிறது. அரசிடம் இருந்து நேரடியாக நிதியுதவி பெறாமல், அதேசமயம், அரசிடம் இருந்து வரிச்சலுகைகளைப் பெற்று வருகிறது.

பிசிசிஐ அமைப்பு, ஏகோபோகமாக செயல்பட்டு வருவதால், ஒரு வீரரின், குடிமகன் ஒருவரின் அடிப்படை உரிCricket, BCCI, FC Playersமைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மீறி செயல்படுகிறது.

ஒரு குடிமகன் அல்லது வீரர் தன்னுடைய அடிப்படை உரிமைகள் பிசிசிஐ அமைப்பால் மீறப்பட்டு இருந்தால், அதற்கு எதிராக, உச்ச நீதிமன்றம் வரை முறையிட ஒரு சராசரி குடிமகனுக்கு உரிமை இருக்க வேண்டும்.

வெளிப்படைத்தன்மையின்மை

அரசின் ஆய்வுக்கு உட்படாமல், கண்காணிப்பில் சிக்காமல் சுயமாகவே பிசிசிஐ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதனால், ஒருவிதமான ரகசியத்தன்மையும், நம்பகமற்ற சூழலையும் பிசிசிஐ ஊக்குவிக்கிறது.

இதன் காரணமாக பிசிசிஐ என்றாலே பொதுமக்களின் மனதில் ஊழல் நிறைந்தது, முறைகேடுகள் நிறைந்தது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், நாடுமுழுவதும் பெரும்பாலான மக்களால் விளையாடப்படும் கிரிக்கெட் விளையாட்டுக்கு எதிர்மறையான பாதிப்புகளை அமைப்பு ஏற்படுத்தி இருக்கிறது.Rishabh Pant, Rishabh Pant IPL, Virender Sehwag, Rishabh Pant IPL 2017, IPL 2017, Cricket

பிசிசிஐ அமைப்பு அனைத்து சூழல்களுக்கு ஏற்றார்போல் நம்பகத்தன்மை கொண்டதாக, வீரரின், சராசரி குடிமகனின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாதவாறு, மீறிச் செல்லாதவாறு மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

ஆர்.டி.ஐ.சட்டத்தில்

பிசிசிஐ அமைப்பு அரசுசாரா, சுயமான அமைப்பான இருந்தாலும், அரசின் அங்கீகாரம் பெற்ற தேசிய விளையாட்டு அமைப்பு போலவே செயல்பட்டு வருகிறது. ஆதலால், பிசிசிஐ இணையதளத்தில் தேசிய விளையாட்டு அமைப்பில் ஒரு அங்கம் என்று இனிமேல் குறிப்பிட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ அமைப்பை தகவல் பெறும் உரிமைச் சட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும். பிசிசிஐ அமைப்பு அரசின் ஒரு அங்கம் போல செயல்பட்டு வருவதால், ஏன் அந்த அமைப்பை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரக்கூடாது?

இந்தியாவின் பிரதிநிதியாக

சர்வதேச அளவில் இந்தியாவின் சார்பில் விளையாடச் செல்லும் வீரர்களை பிசிசிஐ அமைப்புதான் தேர்வு செய்கிறது. நாட்டின் தேசியக்கொடி பொறித்த ஆடைகளை வீரர்கள் அணிகிறார்கள், விளையாட்டு வீரர்களுக்கு உரிய கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளுக்கும் பிசிசிஐ பரிந்துரைக்கிறது.பிசிசிஐக்கு ரூ.22 ஆயிரம் கோடி வரிவிலக்கா?: அரசு அமைப்பாக்கி, ஆர்.டி.ஐ. சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும்: சட்ட ஆணையம் பாய்ச்சல் 3

அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக பிசிசிஐ அமைப்பை வைத்திருக்கிறது. இந்த சிறப்பு உரிமையை மத்திய அரசு மாற்றுவதற்கு முயற்சி எடுக்கவில்லை, பிசிசிஐ அமைப்பும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அரசியல் தலைவர்கள்

மேலும், பிசிசிஐ அமைப்பில் வெவ்வேறு கால கட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதில் தலைவர் பதவில் இருந்துள்ளனர். குறிப்பாக எ.பி.கே. சால்வே, மாதவராவ் சிந்தியா, ரன்பீர் சிங் மகேந்திரா, சரத்பவார், சமீபத்தில் அனுராக் தாக்கூர் ஆகியோர் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களே.

வரிச்சலுகைகள்

அதுமட்டுமல்லாமல், அரசிடம் இருந்து பல்வேறு வரிச்சலுகைகளை பிசிசிஐ அமைப்பு பெற்று வருகிறது. கடந்த 1997-ம் ஆண்டில் இருந்து 2007ம் ஆண்டுவரை ஒட்டுமொத்தமாக ரூ.22 ஆயிரம் கோடி (ரூ. 21,683,237,489) வரிச்சலுகையை பிசிசிஐ பெற்றுள்ளது.

நேரடியாக அரசு நிதி அளிக்காவிட்டாலும் கூட மறைமுக இதுபோன்ற வரிச்சலுகைகள், மானியங்கள், தள்ளுபடிகள், குறைந்த விலையில் நிலங்கள், உள்ளிட்ட பல சலுகைகளை பிசிசிஐக்கு அளித்து வருகிறது.

மத்திய அரசிடம் இருந்து மறைமுகமாக இத்தனை சலுகைகள், குறிப்பிட்ட அளவு பணம், ஆகியவற்றை பெறும் பிசிசிஐ அமைப்பு, ஏன் பொதுத்துறை நிறுவனம் அல்லது அரசு அமைப்பு என்ற ரீதியில் செயல்பாடமல் தொடர்ந்து தனியார் அமைப்பாக, ஏகபோக உரிமை பெற்ற, அரசு சாரா நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

அரசு அமைப்பாக மாற்றுங்கள்

ஆதலால், 90 ஆண்டு பழமையான பிசிசிஐ அமைப்பை அரசு அமைப்பாக அறிவிக்க வேண்டும். அதை தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். பிசிசிஐ அமைப்புகள், மாநில கிளைகள், தலைவர், உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவரும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்களாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு சட்ட ஆணையம் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *